← முகப்பு தமிழ்

அநுராதபுரத்தில் பௌத்த பிக்குவால் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட சிறுமிக்கு நீதி வழங்குமாறு கோரி மட்ட

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 தமிழ் 44 பார்வைகள்

வடக்கு, கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கு மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.

அனுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு உடனடியாக நீதி வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி, "வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு" அமைப்பினர் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஒன்றுகூடிய பெண்கள் ஊர்வலமாக சென்று படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபிக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் "பிக்குவினால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அனுராதபுரம் சிறுமிக்கு நீதி வழங்குக…", “பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதியை நிலைநாட்டுங்கள்”, "மதத்தின் பெயரால் பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்கவேண்டாம்”, “சட்டத்தினால் மறுக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு பிணை கிடையாது” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பெரிய பதாதைகளை ஏந்தியவாறு தங்களது பலத்த எதிர்ப்பை வெளியிட்டனர்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு விரைவாக நீதி கிடைக்கவேண்டும் என்பதுடன், குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள பிக்குவுக்கு எதிராக சட்டம் பாகுபாடின்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான, குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நாட்டில் அதிகரித்துவரும் நிலையில், அவர்களுக்கான பாதுகாப்பை அரசு பலப்படுத்தவேண்டும்.

இச்சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சர், மனித உரிமைகள் ஆணைக்குழு போன்றவர்கள், உரிய அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்ட வேளையில் மகஜர் வாசிக்கப்பட்டதுடன் அந்த மகஜர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அலுவலகத்திலும் கையளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வரும் 5 முக்கிய கடத்தல்காரர்களில் ஒருவராக 'ஷிரான் பாசிக்' (Shira
5 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
உலகெங்கிலும் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பல்வேறு அளவிலான காதுகேளாமை (கேட்டல் குறைபாடு) பிரச்சினைகளுடன்
6 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஹொரணை, படகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியிருந்தவர்களில்
7 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான பருவச்சீட்டுகளை அரச ஊழியர்களுக்கு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, புகையிரத
8 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தம்புள்ளை – குருணாகல் பிரதான வீதியின் கலேவெல, கநாதன பகுதியில் இன்று புதன்கிழமை (03) பிற்பகல்
10 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தாய்லாந்தின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் மிகவும் செல்வாக்குமிக்க அரசியல் தலைவருமான தக்ஷின் ஷினவத்ராவுக்கு
10 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
Did Vaibhav Suryavanshi insult Virat Kohli? Harsha Bhogle Slams F
2
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் புதன் பகவான் நுழைந்துள்ளார்.
3
காலியில் திருட்டு சந்தேக நபரான 16 வயது சிறுவனைக் கொடூரமாகத் தாக்க
4
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்
5
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 04 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
6
ஆயுளை அதிகரிக்க எவ்வளவு நேரம் எடைப்பயிற்சி செய்ய வேண்டும் –
செய்திகள் · 45 நிமிடங்கள் முன்னர்
7
சீன வரலாற்றை மாற்றிய மா சேதுங்கின் கலாசார புரட்சி – 60 ஆண்ட
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net