← முகப்பு செய்திகள்

அதிமுக உட்கட்சி மோதல் உச்சத்தை அடைந்துள்ளது. ஈபிஎஸ், சிவி சண்முகம் ஆகியோர் ஆதரவு எம்எல்ஏக்களுடன் தனிதனியே

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 24 பார்வைகள்
அதிமுக உட்கட்சி மோதல் உச்சத்தை அடைந்துள்ளது. ஈபிஎஸ், சிவி சண்முகம் ஆகியோர் ஆதரவு எம்எல்ஏக்களுடன் தனிதனியே
சிவி சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் தனிதனியே ஆலோசனை

சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியதோடு, 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க எடப்பாடி முயற்சி செய்தத்தாக குற்றச்சாட்டை முன்வைத்து அதிமுகவில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பொதுக்குழுவை எடப்பாடி கூட்ட வேண்டும் என சிவி சண்முகம் தலைமையிலான அணி வலியுறுத்த தொடங்கி உள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் பெருபான்மையை தவெக அரசு நிரூபிக்க சட்டசபை கூடியது. அதில் சிவி சண்முகம், வேலுமணி தலைமையிலான அதிமுக அணி தவெகவிற்கு ஆதரவு அளித்து வாக்களித்தனர். தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்த எம்எல்ஏக்கள் உள்பட 26 பேரின் மாவட்ட செயலாளர் பதவியை எடப்பாடி பறித்துள்ளார்.

சட்டசபையில் அதிமுகவிற்கான அங்கீகாரம் பெற இருதரப்பும் முயற்சி செய்து வருகிறது. இன்று காலை தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை இருதரப்பினரும் சந்தித்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தி உள்ளனர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் கிரீன்வேஸ் இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டு உள்ளார். அதே போல சிவி சண்முகம் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் எம்ஆர்சி நகர் அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இருதரப்பினருக்கும் மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இதனால் ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்
செய்திகள்
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுகவின் ஒன்றியம், நகரம் என
06 Jun 2026
செய்திகள்
அதிமுக நிர்வாகிகள் பலர் தவெகவில் தொடர்ந்து இணைந்து வருகிறார்கள். இதே போல பாஜக நிர்வாகிகளும் அக்கட்சியிலிருந்த
06 Jun 2026
செய்திகள்
IND vs AFG Test Day 1: Shubman Gill and KL Rahul smash
06 Jun 2026
செய்திகள்
IND vs AFG Test: KL Rahul sparks internet debates after using calm
06 Jun 2026
செய்திகள்
திமுகவின் பொதுச் செயலாளராக உள்ள துரைமுருகன், தனது பதவியை துறக்கவிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் அரசியல் வட்
06 Jun 2026
செய்திகள்
இந்திய பெண்ணுக்கு எதிராக சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகர் ரவி மோகனின்
06 Jun 2026
முக்கிய செய்திகள்
1
அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்ய எடுத்த முடிவு குறித்து தான் கவல
தமிழ் · 06 Jun 2026
2
“இதைப் பதிவு செய்து உங்களிடம் வைத்துக் கொள்ளுங்கள். 2029 இல் நாமல
தமிழ் · 06 Jun 2026
3
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள
4
Weekly Horoscope: இங்கு 2026 ஜூன் 07 ஆம் தேதி முதல் 2026 ஜூன் 13
5
அதிமுக நிர்வாகிகள் பலர் தவெகவில் தொடர்ந்து இணைந்து வருகிறார்கள்.
6
முன்னாள் அரச புலனாய்வு சேவை (SIS) இயக்குநரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜ
தமிழ் · 06 Jun 2026
7
புதிதாக உருவாக்கப்படும் அரசியல் கூட்டணிகளால் எந்த மாற்றமும் ஏற்பட
தமிழ் · 06 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net