← முகப்பு செய்திகள்

Tamil Nadu's Vishal T.K. creates New History in Indian Athletics: Vishal T.K.,

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 32 பார்வைகள்
Tamil Nadu's Vishal T.K. creates New History in Indian Athletics: Vishal T.K.,

ராஞ்சி: இந்திய தடகள வரலாற்றில் இதற்கு முன் எவரும் செய்யாத ஒரு மகத்தான சாதனையைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் விஷால் டி.கே. நிகழ்த்திக் காட்டியுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று வரும் பெடரேஷன் கோப்பை தடகளப் போட்டியில், ஆடவர் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தை 45 விநாடிகளுக்கும் குறைவான நேரத்தில் கடந்து, இந்த மைல்கல்லை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றில், விஷால் டி.கே. பந்தய தூரத்தை வெறும் 44.98 விநாடிகளில் கடந்து புதிய தேசிய சாதனை படைத்தார். இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு அவரே படைத்திருந்த 45.12 விநாடிகள் என்ற தேசிய சாதனையைத் தற்போது அவரே முறியடித்துள்ளார். 400 மீட்டர் ஓட்டத்தில் 45 விநாடி என்ற தடையை உடைப்பது இந்திய தடகள வீரர்களுக்கு நீண்ட கால சவாலாக இருந்து வந்தது. அந்தச் சவாலைத் தகர்த்து விஷால் புதிய சகாப்தத்தைப் படைத்துள்ளார்.

Tamil Nadu s Vishal T K creates New History in Indian Athletics First Indian to Break the 45-Second Barrier

இந்த வரலாற்றுச் சாதனை ஒருபுறம் இருந்தாலும், காமன்வெல்த் போட்டிகளுக்கான தகுதி நேரமான 44.96 விநாடிகளை எட்ட விஷாலுக்கு வெறும் 0.02 விநாடிகள் மட்டுமே தேவைப்பட்டது. மிகக் குறைந்த நேர வித்தியாசத்தில் அந்த வாய்ப்பு நழுவிய போதிலும், ஆசிய அளவில் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக விஷால் உருவெடுத்துள்ளார்.

இந்தத் தொடரில் விஷால் சாதனை படைப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு, பஞ்சாப் வீரர் குரிந்தர்வீர் சிங் 100 மீட்டர் ஓட்டத்தில் 10.09 விநாடிகளில் கடந்து புதிய வரலாறு படைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து விஷால் படைத்த இந்தச் சாதனை இந்திய விளையாட்டுத் துறையை உற்றுநோக்க வைத்துள்ளது.

இந்தப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த ராஜேஷ் ரமேஷ் 45.31 விநாடிகளிலும், மூன்றாம் இடத்தைப் பிடித்த இளம் வீரர் ஜெய் குமார் 45.47 விநாடிகளிலும் பந்தய தூரத்தைக் கடந்தனர். இறுதிப் போட்டியில் பங்கேற்ற முதல் 5 வீரர்களுமே 46 விநாடிகளுக்கும் குறைவான நேரத்தில் பந்தயத்தை முடித்தது, இந்திய தடகளத்தின் தரம் உயர்ந்து வருவதைக் காட்டுகிறது.

விஷால் டி.கே. – 44.98 விநாடி (புதிய தேசிய சாதனை)
ராஜேஷ் ரமேஷ் – 45.31 விநாடி
ஜெய் குமார் – 45.47 விநாடி
மனு டி.எஸ். – 45.70 விநாடி
தரம்வீர் சவுத்ரி – 45.85 விநாடி

இந்திய டி20 அணியின் புதிய கேப்டன்.. கில், திலக் வர்மா, ஸ்ரேயாஸ்.. கம்பீர் சொல்வது தான் இறுதி!

தமிழ்நாட்டு வீரர் விஷாலின் இந்த அசுர வளர்ச்சி, வரும் சர்வதேசப் போட்டிகளில் இந்தியாவுக்குப் பதக்கங்களைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இவரது இந்தச் சாதனையை விளையாட்டு ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net