← முகப்பு செய்திகள்

RCB Vs Gujarat Titans IPL 2026 Qualifier 1 Preview- Ambati Rayudu speaks

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 28 பார்வைகள்
RCB Vs Gujarat Titans IPL 2026 Qualifier 1 Preview- Ambati Rayudu speaks

மும்பை: ஐபிஎல் 2026 குவாலிஃபையர் 1 போட்டியில் குஜராத் டைட்டன்ஸை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளும் எதிர்கொள்கிறது. சிஎஸ்கே பேட்டர் அம்பதி ராயுடு, மிடில் ஓவர் பந்துவீச்சு மட்டுமே ஆர்சிபிக்கு கவலையளிக்கும் பகுதி என்று தெரிவித்துள்ளார். தர்மசாலாவில் உள்ள இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் இந்த மோதல் நடைபெறவுள்ளது.

சுயாஷ் சர்மா, ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் க்ருணால் பாண்டியா ஆகியோர் எதிர்பார்த்த அளவுக்குத் திறம்பட பந்துவீசவில்லை என்று ராயுடு சுட்டிக்காட்டினார். இது குறித்து பேசிய அவர், "ஆர்சிபியின் ஒரே பிரச்சனை என்னவென்றால், கடந்த சில போட்டிகளில் மிடில் ஓவர் பந்துவீச்சு அவ்வளவு சிறப்பாக இல்லை. சுயாஷ் சற்றே ஃபார்ம் இழந்திருக்கிறார். ரொமாரியோ ஷெப்பர்ட் தனது பந்துவீச்சில் தேவையானதைச் சரியாகச் செய்யவில்லை, க்ருணால் பாண்டியா சற்றே கணிக்கக்கூடியவராக மாறிவிட்டார்." என்றார்.

"ஆகவே, ஆர்சிபிக்கு சிறிய கவலையளிக்கும் பகுதி அதுதான். மற்றபடி, குஜராத் டைட்டன்ஸ் அணியைக் காட்டிலும் ஆர்சிபியின் பேட்டிங் மிகவும் சிறப்பாக உள்ளது," என்று குறிப்பிட்டார். புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம் பிடித்தது, அதேசமயம் குஜராத் டைட்டன்ஸ் இரண்டாம் இடம் பிடித்தது.

IPL 2026: கிரிக்கெட் வீரர்கள் குடும்பத்தினரை அநாகரிகமாக நடத்துவதா? நீங்க எல்லாம் மனுசங்களா?

லீக் சுற்றில், ஏப்ரல் 30 அன்று அகமதாபாத்தில் நடந்த மோதலில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஆர்சிபியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதற்கு முன், ஏப்ரல் 24 அன்று பெங்களூருவில் நடந்த போட்டியில் ஆர்சிபி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தியிருந்தது.

இதற்கிடையில், முன்னாள் தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர்-பேட்டர் மார்க் பவுச்சர், ஆர்சிபி வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். முன்னதாக, அகமதாபாத்தில் ஆர்சிபி மற்றும் ஜிடி மோதியபோது, ஹேசில்வுட் தனது நான்கு ஓவர்களில் விக்கெட் எடுக்காமல் 56 ரன்களை வாரிக்கொடுத்து, விலையுயர்ந்த பந்துவீச்சாளராக மாறினார். குறிப்பாக, பவர் பிளேவில் ஷுப்மன் கில்லை அவர் கட்டுப்படுத்தத் தவறினார்.

"போட்டியின் இந்த கட்டத்தில் ஹேசில்வுட்டைக் குறைத்து மதிப்பிட முடியாது. இந்த வீரர்கள் போட்டி முழுவதும் ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கலாம், ஆனால் நெருக்கடியான நேரம் வரும்போது, அவர்கள் கூடுதல் உத்வேகத்துடன் செயல்படுவார்கள்."

"இரண்டு அணிகளும் அந்த கூடுதல் உத்வேகத்தைக் கண்டறியும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. அவர்கள் வெற்றி பெற விரும்புகிறார்கள். ஒன்று அல்லது இரண்டு போட்டிகளுக்கு மேலாகவும் தங்கள் உடலை இன்னும் ஒருபடி மேலே தள்ள முடியும் என்று அவர்களுக்குத் தெரியும். ஹேசில்வுட் மீண்டு வருவார் என்று நான் எதிர்பார்க்கிறேன். புவியிடமிருந்தும் அவருக்குச் சிறந்த ஆதரவு கிடைத்துள்ளது." என்று பவுச்சர் மேலும் குறிப்பிட்டார்.

IPL 2026: சிஎஸ்கே இந்த மாற்றம் செய்தே ஆக வேண்டும்.. ரசிகர்கள் ஏமாந்து விட்டார்கள் -சஞ்சய் மஞ்ரேக்கர்

ஐபிஎல் 2026 தொடரின் 11 போட்டிகளில், ஹேசில்வுட் சராசரியாக 34.83 ரன்கள் கொடுத்து 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், மேலும் அவரது எக்னாமித 9.60 ஆகவும், சிறந்த பந்துவீச்சு 4-12 ஆகவும் உள்ளது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net