← முகப்பு இன்றைய ராசிபலன்

Mercury transit in Taurus bring challenges and tough times to these 3

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 இன்றைய ராசிபலன் 40 பார்வைகள்
Mercury transit in Taurus bring challenges and tough times to these 3

ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றிக் கொள்கின்றன. தற்போது கிரகங்களின் இளவரசரான புதன் மேஷ ராசியிலிருந்து இடம் பெயர்ந்து சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசிக்குள் நுழைகிறார். இந்த கிரக மாற்றம் ஜோதிடரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

புதனின் இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ரசியக்காரர்கள் இந்த கிரக மாற்றத்தால் நேர்மறையான பலன்களை அடைந்தாலும் சில ராசிக்காரர்கள் இந்த கிரக பெயர்ச்சியால் எதிர்மறையான பலன்களை அனுபவிக்கப் போகிறார்கள். அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டிலுமே தடைகளும், பின்னடைவுகளும் ஏற்படக்கூடும். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த கிரக மாற்றம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது. அவர்கள் தேவையற்ற செலவுகளையும், அலைச்சலையும் சந்திக்கக்கூடும். இந்த காலகட்டத்தில், அவர்களின் பேச்சு மிகவும் கடுமையானதாக மாறலாம், இது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அல்லது சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களுக்கு வழிவகுக்கும்.

திடீர் திருட்டு, நிதி இழப்பு அல்லது நெருப்பு தொடர்பான விபத்துகளில் மாட்டிக் கொள்ள வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இந்த காலகட்டத்தில் அவர்களின் ஆரோக்கியத்திலும் சில பின்னடைவு ஏற்படக்கூடும். இந்த காலகட்டத்தில் எந்த முதலீடும் செய்ய வேண்டாம், இல்லையெனில் இழப்புகள் ஏற்படலாம். நண்பர்களிடையே ஈகோவைத் தவிர்க்கவும், இல்லையெனில் அது உங்கள் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு புதனின் இந்த ராசி மாற்றம் எதிர்பாராத சவால்களைக் கொண்டுவரக்கூடும். இந்த காலகட்டத்தில் ஆரோக்கியத்தில், குறிப்பாக ஒவ்வாமை அல்லது தோல் தொடர்பான பிரச்சனைகளில், கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். மறைமுக எதிரிகள் உங்களுக்குச் சிக்கல்களை உருவாக்க முயலக்கூடும். செலவுகளும் பயணங்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த கிரக பெயர்ச்சியால் அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்திக்கலாம். அவர்களின் பேச்சில் பணிவிருக்காது. மற்றவர்களுடன் பேசும்போது பல வாக்குவாதங்கள் ஏற்படலாம், எனவே வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

இந்த காலகட்டத்தில் அவர்களின் தைரியம் அதிகரிக்கும், ஆனால் எந்த பணியையும் முடிக்க அவர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். தொழில்ரீதியாக, இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்காமல் போகலாம். வணிகத்தில் வியாபாரிகள் ஒரு மந்தமான காலகட்டத்தை அனுபவிக்கலாம்.

கும்பம்

இந்த கிரக பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களை அளிக்கும். குடும்பத்தினரிடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம், மேலும் அவர்கள் வெளிநாட்டு தொடர்பான வேலைகள் அல்லது வணிகங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் மாணவர்களுக்கும் இந்த காலம் கொஞ்சம் கடினமாக இருக்கலாம். அவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படலாம்.

அவர்கள் தங்கள் காதல் வாழ்க்கையில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும், வேறு எந்த இடத்திற்கும் பயணம் செய்வதற்கு முன்பு நன்றாக சிந்திக்க வேண்டும். உங்கள் உடல்நலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net