← முகப்பு இன்றைய ராசிபலன்

Jupiter, Venus, Mercury Make Trigrahi Yog In Cancer 2026: வேத நாட்காட்டியின் படி,

🕐 1 நாள்கள் முன்னர் 📂 இன்றைய ராசிபலன் 14 பார்வைகள்
Jupiter, Venus, Mercury Make Trigrahi Yog In Cancer 2026: வேத நாட்காட்டியின் படி,

Trigrahi Yog In Cancer 2026: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமின்றி, கிரக சேர்க்கைகளால் உருவாகும் யோகங்களும் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜூன் மாதத்தில் 3 கிரகங்களின் சேர்க்கையால் ஒரு அற்புதமான மற்றும் மங்களகரமான யோகம் உருவாகவுள்ளது. அது தான் திரிகிரக யோகம்.

அதுவும் இந்த யோகம் குரு, புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கையால் உருவாகவுள்ளது. இந்த சிறப்பான யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளன. அதில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும், சில ராசிக்காரர்களுக்கு மோசமாகவும் இருக்கலாம்.

வேத நாட்காட்டியின் படி, தேவர்களின் குருவான குரு பகவான் ஜூன் 02 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைகிறார். அதைத் தொடர்ந்து ஜூன் 08 ஆம் தேதி அசுரர்களின் குருவான சுக்கிரன் கடக ராசிக்குள் நுழையவுள்ளார். அதன் பின் ஜூன் 11 ஆம் தேதி கிரகங்களின் இளவரசனான புதன் கடக ராசிக்குள் நுழையவுள்ளார்.

இப்படி மூன்று கிரகங்களும் கடக ராசிக்குள் நுழைவதால், திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. அதுவும் 12 ஆண்டுகளுக்கு பின் கடக ராசிக்குள் நுழைந்த குருவால் உருவாகவுள்ள இந்த யோகத்தால் 5 ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

Jupiter Venus Mercury Make Trigrahi Yog In Cancer 2026 List Of Lucky Zodiac Signs

மேஷம்

மேஷ ராசியின் 4 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் குடும்ப வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் காண்பார்கள். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். மன அழுத்தம் குறையும். வேலை அல்லது வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. மேலும் இக்காலத்தில் செய்யக்கூடிய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் அவசரப்பட்டு எந்த முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

Jupiter Venus Mercury Make Trigrahi Yog In Cancer 2026 List Of Lucky Zodiac Signs

மிதுனம்

மிதுன ராசியின் 2 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும், தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீண்டகாலமாக சந்தித்து வந்த கால் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

Jupiter Venus Mercury Make Trigrahi Yog In Cancer 2026 List Of Lucky Zodiac Signs

கன்னி

கன்னி ராசியின் 11 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களிடையே தகவல் தொடர்பும் புரிதலும் வலுப்பெறும். ஆரோக்கியம் மேம்படும். முக்கியமாக நீண்ட காலமாக சந்தித்து வந்த பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

Jupiter Venus Mercury Make Trigrahi Yog In Cancer 2026 List Of Lucky Zodiac Signs

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாகவும், தனிப்பட்ட வாழ்க்கையும் நன்றாக இருக்கும். சொத்து தொடர்பான விஷயங்கள் அல்லது முதலீடுகளில் இருந்து நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. எந்த ஒரு முடிவுகளையும் சிந்தித்து எடுத்தால், நல்ல பலன் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். திருமணமாகாதவர்கள் தங்கள் துணையை சந்திக்கலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் மேம்பட்டு, மருத்துவ செலவுகள் குறையும். பண வரவு அதிகரிக்கும். நிதி நிலைமை உயரும்.

Jupiter Venus Mercury Make Trigrahi Yog In Cancer 2026 List Of Lucky Zodiac Signs

கும்பம்

கும்ப ராசியின் 6 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் குடும்ப பிரச்சனை தீரும். உறவினர்களிடையேயான உறவு வலுவடையும். நிதி நிலைமையிலும் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வருமானத்திலும் உயர்வு ஏற்படும். நன்கு சிந்தித்து முடிவுகளை எடுத்தால், அது வாழ்வில் நிம்மதியையும் சமநிலையையும் கொண்டு வரக்கூடும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net