← முகப்பு செய்திகள்

LSG vs PBKS: Do or Die for Punjab Kings Against Lucknow; Arjun

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 32 பார்வைகள்
LSG vs PBKS: Do or Die for Punjab Kings Against Lucknow; Arjun

லக்னோ: 2026 ஐபிஎல் தொடரின் 68-வது லீக் ஆட்டம் லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா மைதானத்தில் நடைபெறுகிறது. பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற இந்தப் போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி, டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. லக்னோ அணி ஏற்கனவே தொடரிலிருந்து வெளியேறிவிட்டாலும், தனது சொந்த மண்ணில் கௌர வெற்றி பெற இந்தப் போட்டியில் களம் காண்கிறது.

டாஸ் வென்ற பின் பேசிய பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், "நாங்கள் முதலில் பந்துவீசத் தீர்மானித்துள்ளோம். இது எங்களுக்கு வாழ்வா – சாவா போன்ற ஒரு போட்டி. இதுபோன்ற இக்கட்டான சூழலில் நாங்கள் இதற்கு முன்பு இருந்ததில்லை. இருப்பினும், அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர். இந்தப் போட்டியின் முடிவு எங்களுக்குச் சாதகமாக அமையும் என நம்புகிறோம்" எனத் தெரிவித்தார். பஞ்சாப் அணியில் மார்கோ ஜான்சன் மற்றும் விஜய்குமார் வைஷாக் ஆகியோர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

LSG vs PBKS Do or Die for Punjab Kings Against Lucknow Arjun Tendulkar Gets a Chance

மறுபுறம், லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறுகையில், "இந்தப் பிட்ச் பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமானது. இந்த சீசன் எங்களுக்கு ஒரு கடினமான பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளது. எங்களுக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு எங்களது நன்றியையும் மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்கிறோம். இன்று எங்களது 100 சதவீத உழைப்பைக் கொடுப்போம்" என்றார். லக்னோ அணியில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் அர்ஷின் குல்கர்னி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆடுகளம் குறித்துப் பேசிய வர்ணனையாளர்கள் ஆரோன் பின்ச் மற்றும் கிரேம் ஸ்வான், மைதானத்தின் எல்லைக் கோடுகள் மிகவும் சிறியதாக மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். மைதானத்தின் ஒரு பக்கம் 60 மீட்டராகவும், மறுபக்கம் 61 மீட்டராகவும் மட்டுமே உள்ளது. பிட்ச் 70 சதவீதம் சிவப்பு மண் மற்றும் 30 சதவீதம் கருப்பு மண்ணால் ஆனது. புற்கள் ஆங்காங்கே வறண்டு காணப்படுவதால் பந்துவீச்சாளர்களுக்கு ஓரளவுக்குக் கை கொடுக்கும். இருப்பினும், சிறிய எல்லைக் கோடுகள் இருப்பதால் அதிக ரன்கள் குவிக்கப்படும் போட்டியாக இது இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

பிளே-ஆப் கனவோடு பஞ்சாப் அணியும், கௌரவத்தை மீட்கும் முனைப்புடன் லக்னோ அணியும் மோதுவதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்குத் பஞ்சம் இருக்காது.

IPL 2026: ஆர்சிபி வேண்டுமென்றே தோல்வி அடைந்ததா? பிளே-ஆஃப் செல்லும் முன் எடுத்த ரிஸ்க்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: ஜோஷ் இங்லிஸ், அர்ஷின் குல்கர்னி, நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, ரிஷப் பண்ட், அப்துல் சமத், முகுல் சவுத்ரி, அர்ஜுன் டெண்டுல்கர், முகமது ஷமி, பிரின்ஸ் யாதவ், மொஹ்சின் கான்.

பஞ்சாப் கிங்ஸ்: பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, கூப்பர் கான்னொலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யான்ஷ் ஷெட்ஜ், சஷாங்க் சிங், அஸ்மதுல்லா உமர்சாய், மார்கோ ஜான்சன், விஜய்குமார் வைஷாக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாகல்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net