← முகப்பு செய்திகள்

IPL 2026 sees major stars like MS Dhoni and Matheesha Pathirana sidelined

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 46 பார்வைகள்
IPL 2026 sees major stars like MS Dhoni and Matheesha Pathirana sidelined

மும்பை: 2026 ஐபிஎல் தொடரின் லீக் சுற்று முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. ஆனால், இன்னும் சில முன்னணி நட்சத்திர வீரர்கள் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டும், பலரது விருப்ப வீரர்களாக இருந்தும், இந்த சீசனில் இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் அந்த ‘டாப்’ வீரர்கள் பெஞ்சில் அமர்ந்திருப்பது ரசிகர்களிடையே பேசுபொருள் ஆகி உள்ளது. அவர்கள் யார்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடையாளமான எம்.எஸ்.தோனி, இந்த சீசனில் இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. 44 வயதான தோனிக்கு கணுக்கால் பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் அவருக்கு முட்டுக்கட்டையாக உள்ளது. அவர் அணியுடன் அனைத்து இடங்களுக்கும் பயணம் செய்கிறார், ஆலோசகர் போல வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்குகிறார். ஆனால், அவர் போட்டியில் பேட்டிங் செய்வதையும், துல்லியமாக கீப்பிங் செய்வதையும் பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஏக்கத்தில் உள்ளனர்.

Missing Stars of IPL 2026 Why MS Dhoni Pathirana and Rachin Ravindra Are Still on the Bench

கடந்த சீசனில் கடைசி ஓவர்களில் பந்துவீச்சில் மிரட்டிய மதீஷா பதிரானா, இந்த முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். ஆனால் தசைநார் காயம் காரணமாக அவர் இன்னும் ஒரு போட்டியில் கூட களம் காணவில்லை. பதிரானா இல்லாதது கொல்கத்தா அணியின் டெத் ஓவர் பந்துவீச்சை பலவீனப்படுத்தியுள்ளது.

அதேபோல், நியூசிலாந்து நட்சத்திரம் ரச்சின் ரவீந்திராவுக்கும் கொல்கத்தா அணியில் இன்னும் இடம் கிடைக்கவில்லை. அணியில் வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும், டாப் ஆர்டரில் பின் ஆலன் மற்றும் கேமரூன் கிரீன் போன்றோர் நிலையாக இருப்பதாலும் ரச்சின் ரவீந்திரா பெஞ்சில் அமர வைக்கப்பட்டுள்ளார்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் அதிரடி வீரர் பிரித்வி ஷாவுக்கு இந்த ஐபிஎல் தொடர் ஒரு மோசமான கனவாகவே உள்ளது. ஒரு காலத்தில் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரராக வலம் வந்த அவருக்கு, இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக இளம் வீரர்களுக்கே டெல்லி கேப்பிடல்ஸ் நிர்வாகம் முன்னுரிமை அளித்து வருகிறது. அந்த அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் நிலையிலும் ஒரு மாற்றத்துக்காக கூட பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

IPL: அத்துமீறிய மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர்.. அம்பயருக்கு திட்டு.. சாட்டையை எடுத்த பிசிசிஐ

இம்பாக்ட் பிளேயர் விதி இருந்தும் கூட, பல கோடி ரூபாய் சம்பளம் பெறும் இது போன்ற முன்னணி வீரர்கள் இன்னும் களம் காணாமல் இருப்பது கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. காயம் ஒருபுறம் என்றால், அணி நிர்வாகத்தின் கணக்கீடுகள் மறுபுறம் இந்த நட்சத்திரங்களை முடக்கிப் போட்டுள்ளன.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net