← முகப்பு செய்திகள்

IPL 2026: Royal Challengers Bengaluru captain Rajat Patidar has etched his name

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 16 பார்வைகள்
IPL 2026: Royal Challengers Bengaluru captain Rajat Patidar has etched his name

தரம்சாலா: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார், டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனை ஒன்றைப் படைத்தார். 2026 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான குவாலிபையர் 1 போட்டியில் 9 சிக்ஸர்களை விளாசியதன் மூலம், ஒரு டி20 தொடரில் அதிக சிக்ஸர்களை அடித்த கேப்டன் என்ற இமாலய சாதனையை அவர் தன்வசமாக்கினார்.

தரம்சாலாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் குஜராத் பந்துவீச்சை துவம்சம் செய்த படிதார், வெறும் 33 பந்துகளில் 93 ரன்கள் குவித்தார். இதில் 5 பவுண்டரிகளும், 9 சிக்ஸர்களும் அடங்கும். இந்த 9 சிக்ஸர்களுடன் சேர்த்து, நடப்பு ஐபிஎல் 2026 தொடரில் அவர் அடித்த மொத்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் 2023-24 சையது முஷ்டாக் அலி தொடரில் அசாம் அணி கேப்டனாக 40 சிக்ஸர்களை அடித்திருந்த ரியான் பராக்கின் உலக சாதனையை அவர் முறியடித்தார்.

IPL 2026 Rajat Patidar s World Record by hitting 41 sixers in a single T20 tournament

ஐபிஎல் வரலாற்றைப் பொறுத்தவரை, கடந்த 2025-ம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் 39 சிக்ஸர்களை அடித்ததே ஒரு சீசனில் ஒரு கேப்டன் அடித்த அதிகபட்ச சிக்ஸர்களாக இருந்தது. அவருக்கு அடுத்தபடியாக 2016-ல் பெங்களூரு கேப்டனாக விராட் கோலி 38 சிக்ஸர்களை அடித்திருந்தார். தற்போது படிதார் இவர்கள் அனைவரையும் முந்தி சர்வதேச அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

IPL 2026: 33 பந்தில் 93 ரன்கள் குவித்த கேப்டன் ரஜத்.. ஆர்சிபி மெகா ஸ்கோர்.. மிரண்ட குஜராத்

இந்தப் போட்டியில் ரஜத் படிதார் சதம் அடித்திருந்தால், ஐபிஎல் பிளே-ஆப் சுற்றில் 2 சதங்கள் அடித்த உலகின் முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றிருப்பார். ஏற்கனவே 2022-ம் ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் அவர் சதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. வெறும் 7 ரன்கள் வித்தியாசத்தில் அந்த வரலாற்றுச் சாதனையை அவர் இன்று தவறவிட்டார். ரஜத் படிதாரின் இந்த அதிரடி ஆட்டத்தால் பெங்களூரு அணி 254 ரன்கள் குவித்து, குஜராத் அணிக்கு எட்ட முடியாத இலக்கை நிர்ணயித்தது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net