← முகப்பு செய்திகள்

IPL 2026: Mumbai Indians Captaincy Shake-up: Tilak Varma to Replace Hardik Pandya

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 26 பார்வைகள்
IPL 2026: Mumbai Indians Captaincy Shake-up: Tilak Varma to Replace Hardik Pandya

மும்பை: 2026 ஐபிஎல் தொடரில் இருந்து 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி படுதோல்வியுடன் வெளியேறியுள்ளது. இந்தத் தோல்விக்குப் பிறகு அணியில் ஒரு ‘சுத்திகரிப்பு’ நடவடிக்கையை மேற்கொள்ள நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக, பெரும் எதிர்பார்ப்புடன் கேப்டனாகக் கொண்டுவரப்பட்ட ஹர்திக் பாண்டியாவின் பதவிக்கு ஆபத்து வந்துள்ளதாகவும், அவருக்குப் பதிலாக ஒரு இளம் வீரரை கேப்டனாக்க ரகசியத் திட்டம் தீட்டப்படுவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. அந்த இளம் வீரர் யார்? ஹர்திக் பாண்டியாவின் வீழ்ச்சிக்குக் காரணம் என்ன? என்பதை விரிவாகப் பார்ப்போம்.

2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன் ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஹர்திக் பாண்டியாவை குஜராத் அணியில் இருந்து மும்பை நிர்வாகம் வாங்கி கேப்டன் ஆக்கியது. ஆனால், இந்த 'ஹர்திக் பாண்டியா பரிசோதனை' படுதோல்வியில் முடிந்துள்ளது. இந்த சீசனில் 8 போட்டிகளில் விளையாடிய அவர் வெறும் 146 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். பந்துவீச்சிலும் 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி ஓவருக்கு சராசரியாக 11.90 ரன்களை வாரி வழங்கியுள்ளார். கேப்டனாக வீரர்களை உற்சாகப்படுத்தி வழிநடத்துவதில் அவர் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

IPL 2026 Mumbai Indians Captaincy Shake-up Tilak Varma to Replace Hardik Pandya After IPL 2026 Exit

ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து இறக்கியதை மும்பை ரசிகர்கள் ஆரம்பம் முதலே ஏற்கவில்லை. சொந்த மைதானமான வான்கடேயிலேயே ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்கள் கூச்சலிட்டது அவரது மன உறுதியைக் குலைத்தது. 2024-ல் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்த மும்பை, இப்போது 2026-லும் 11 போட்டிகளில் 8 தோல்விகளைச் சந்தித்து பிளே ஆப் வாய்ப்பை இழந்து முதல் அணியாக வெளியேறியுள்ளது. நட்சத்திர வீரர்கள் ஜஸ்பிரித் பும்ரா விக்கெட் எடுக்கத் திணறுவதும், சூரியகுமார் யாதவ் 'டக் அவுட்' ஆவதும் அணிக்குத் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

வீரர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லை என்பதும், ஒருவரை ஒருவர் மைதானத்திலேயே குற்றம் சாட்டிக் கொள்வதும் தொலைக்காட்சி நேரலைகளிலேயே அப்பட்டமாகத் தெரிந்தது. இதனால் அணியை முழுமையாக மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ளது. இதில் 23 வயதான இளம் வீரர் திலக் வர்மாவுக்கு அதிக பொறுப்புகளை வழங்க நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

IPL 2026: கெட்ட வார்த்தை பேசிய RCB பயிற்சியாளர் ஆண்டி பிளவர்.. பிசிசிஐ அதிரடி நடவடிக்கை

2022-ல் அறிமுகமானது முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகத் தொடர்ந்து ரன்களைக் குவித்து வரும் திலக் வர்மா, அணியின் வருங்கால நம்பிக்கையாக பார்க்கப்படுகிறார். நிதானமாகவும் அதே சமயம் அதிரடியாகவும் விளையாடும் திறன் கொண்ட அவரை, நீண்ட காலத் திட்டத்தின் அடிப்படையில் கேப்டனாக்கலாம் எனப் பேச்சுக்கள் எழுந்துள்ளன. ஹர்திக் பாண்டியாவை நீக்கினால் அது நிர்வாகத்தின் தவறான முடிவை ஒப்புக் கொள்வது போலாகும் என்றாலும், அணியின் நலன் கருதி 2027 சீசனுக்கு முன்னதாக இந்த அதிரடி மாற்றம் நடக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. சாம்பியன் அணி மீண்டும் தலைநிமிருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net