← முகப்பு செய்திகள்

IPL 2026: Karthik Sharma, Shivam Dube Rescue as Chennai Super Kings post

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 29 பார்வைகள்
IPL 2026: Karthik Sharma, Shivam Dube Rescue as Chennai Super Kings post

லக்னோ: 2026 ஐபிஎல் தொடரின் 59-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. பிளே-ஆப் வாய்ப்பைத் தக்கவைக்க இந்தப் போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் களம் இறங்கிய சிஎஸ்கே அணிக்கு, ஆட்டத்தின் தொடக்கத்திலேயே 3 விக்கெட்கள் பறிபோனது. ஆனாலும், கார்த்திக் சர்மா அபார ஆட்டம் ஆடி அணியை மீட்டார். கடைசி நேரத்தில் சிவம் துபே அதிரடி காட்ட சிஎஸ்கே அணி நல்ல ஸ்கோரை எடுத்தது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட், ஆடுகளத்தின் தன்மையைக் கணித்து முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அவரது முடிவிற்குப் பலன் தரும் வகையில், லக்னோவின் பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்திலேயே ஆதிக்கம் செலுத்தினர். சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 13 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார். அவரைத் தொடர்ந்து நிதானமாக ஆடிக்கொண்டிருந்த சஞ்சு சாம்சன் 20 ரன்களிலும், ஊர்வில் படேல் 6 ரன்களிலும் வெளியேறினர்.

IPL 2026 Karthik Sharma Shivam Dube Rescue as CSK get 187 runs in 20 overs Against LSG

சிஎஸ்கே அணி 52 ரன்கள் எடுப்பதற்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. பவர்பிளே முடிவில் அந்த அணி 37 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. லக்னோவின் இளம் பந்துவீச்சாளர் ஆகாஷ் சிங், சென்னையின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை ஒட்டுமொத்தமாகச் சிதைத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சிஎஸ்கே அணி ஒரு மோசமான ஸ்கோரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது, 4-வது வீரராகக் களம் புகுந்த கார்த்திக் சர்மா ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். லக்னோ பந்துவீச்சாளர்களின் வேகத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அவர், மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளைச் சிதறடித்தார். வெறும் 42 பந்துகளைச் சந்தித்த கார்த்திக் சர்மா, 6 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் விளாசினார். 169 என்ற ஸ்டிரைக் ரேட்டில் அவர் ஆடிய விதம் சிஎஸ்கே ரசிகர்களுக்குப் பெரும் உற்சாகத்தை அளித்தது. அவருக்குத் துணையாக ஆடிய டெவால்ட் பிரெவிஸ் 16 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 25 ரன்கள் சேர்த்தார்.

கடைசி கட்டத்தில் களம் இறங்கிய சிவம் துபே, தனது அதிரடி ஆட்டத்தால் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். 16 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 32 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழக்காமல் இருந்தார். பிரசாந்த் வீர் 10 பந்துகளில் 13 ரன்கள் சேர்த்தார். இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் என்ற சவாலான ஸ்கோரை எட்டியது.

லக்னோ அணி தரப்பில் ஆகாஷ் சிங் 4 ஓவர்களில் 26 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 4 ஓவர்களில் 41 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டைப் பெற்றார். மயங்க் யாதவ் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை என்றாலும், 4 ஓவர்களில் 26 ரன்கள் மட்டுமே கொடுத்துக் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினார். ஷாபாஸ் அகமது 1 விக்கெட் எடுத்தார்.

IPL 2026: ருதுராஜ், சாம்சன் விக்கெட்களை வீழ்த்தி விட்டு முன்னாள் சிஎஸ்கே வீரர் ஆகாஷ் செய்த செயல்

ஆரம்பத்தில் நிலைகுலைந்த சிஎஸ்கே அணி, கார்த்திக் சர்மாவின் அபாரமான அரைசதத்தால் கௌரவமான நிலையை எட்டியது. 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி அடுத்து விளையாடியது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net