← முகப்பு செய்திகள்

IPL 2026- Angkrish Raguvanshi Delivers 82 Against Gujarat Titans In IPL 2026

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 20 பார்வைகள்
IPL 2026- Angkrish Raguvanshi Delivers 82 Against Gujarat Titans In IPL 2026

கொல்கத்தா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அன்க்ரிஷ் ரகுவன்ஷி, நடந்து வரும் ஐபிஎல் 2026 சீசனில் வரலாறு படைத்துள்ளார். குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் 82 ரன்கள் குவித்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றார். இந்த சிறப்பான ஆட்டம், ரகுவன்ஷியை ஒரு ஐபிஎல் சீசனில் ஐந்து அரை சதங்கள் அடித்த மூன்றாவது KKR வீரராக உயர்த்தியுள்ளது.

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் அஜிங்க்ய ரஹானே தலைமையிலான KKR அணி தங்களது 12வது லீக் போட்டியில் ரகுவன்ஷி இந்தச் சாதனையைப் படைத்தார். 44 பந்துகளைச் சந்தித்த அவர், தனது 82 ரன்கள் இன்னிங்ஸில் 4 பவுண்டரிகளையும், 7 பிரம்மாண்டமான சிக்ஸர்களையும் விளாசினார்.

இந்த ஆட்டம், சீசனில் அவரது அற்புதமான பேட்டிங்கை மீண்டும் ஒருமுறை நிரூபித்தது.குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ரகுவன்ஷி அடித்த அரை சதம், நடப்பு ஐபிஎல் தொடரில் அவரது ஐந்தாவது 50+ ஸ்கோர் ஆகும்.

CSK: ருதுராஜ் கேப்டன்ஷி படுமோசம்.. லக்னோ வென்றதுக்கே சிஎஸ்கே செய்த இந்த தவறு தான் காரணம்- சேவாக்

இதன்மூலம், கௌதம் கம்பீர் மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோருக்குப் பிறகு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஒரு ஐபிஎல் சீசனில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட அரை சதங்களை அடித்த மூன்றாவது வீரராக அவர் உயர்ந்துள்ளார். நடப்பு 2026 ஐபிஎல் தொடரில் KKR அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக அன்க்ரிஷ் ரகுவன்ஷி திகழ்கிறார் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

CSK-க்கு வாழ்வா? சாவா? புதுசு இல்ல.. ஐபிஎல் வரலாற்றில் 3 முறை பிளே ஆப் நெருக்கடியை சந்தித்த சிஎஸ்கே

இதே போன்று ஐபிஎல் 2026 ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் கேமரன் கிரீன் 28 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். இதில் 4 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் அடங்கும். இதே போன்று தொடக்க வீரர் ஃபின் ஆலன் 38 பந்துகளில் 93 ரன்கள் குவித்தார். இதில் 10 சிக்சர்கள் அடங்கும். 20 ஓவத் முடிவில், கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்தது.

மேலும் செய்திகள்
முக்கிய செய்திகள்
1
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 07 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
2
ரூ.15 லட்சம் கோடி ‘போலி கணக்கு’ காட்டிய நிறுவனத்தில்
செய்திகள் · 26 நிமிடங்கள் முன்னர்
3
தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் களம் இப்போதே சூடுபிட
தலையங்கம் · 38 நிமிடங்கள் முன்னர்
4
நடுவானில் 33,000 அடி உயரத்தில் விமான என்ஜின் வெடித்தும் பயணிகளை க
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
5
பிரிட்டனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கிய இளைஞரால் 18 வயது
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
6
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி விடுத்த நேருக்கு நேர் பேச்சு
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
7
அமெரிக்காவின் மறைந்த தொழிலதிபரும், சிறுமிகளை பாலியல் கடத்தல் செய்
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net