← முகப்பு செய்திகள்

India vs Afghanistan Test: Jasprit Bumrah to be rested; Jammu & Kashmir's

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 20 பார்வைகள்
India vs Afghanistan Test: Jasprit Bumrah to be rested; Jammu & Kashmir's

டெல்லி: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் பும்ராவுக்கு வாய்ப்பு அளிக்கப்படாது என பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பதிலாக ஜம்மு – காஷ்மீரை சேர்ந்த வேகப் பந்துவீச்சாளர் ஒருவர் அணியில் வாய்ப்பு பெறப் போவதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் 2026-27 சீசன் வரும் ஜூன் மாதம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடருடன் தொடங்க உள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்ய அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழுவினர் வரும் 19-ம் தேதி கூடவுள்ளனர்.

India vs Afghanistan Test Jasprit Bumrah to be rested Maiden Call-up for Aqib Nabi Dar from Jammu Kashmir

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. ஜூன் 6 முதல் 10 வரை சண்டிகரின் முல்லன்பூர் மைதானத்தில் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து ஜூன் 14, 17 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தர்மசாலா, லக்னோ மற்றும் சென்னையில் ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன.

ஆப்கானிஸ்தான் உடனான இந்த டெஸ்ட் போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கில் வராததால், நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அவர் டெஸ்ட் போட்டியில் விளையாடாவிட்டால், ஒருநாள் தொடரில் மட்டும் பங்கேற்பார். பும்ரா இல்லாத பட்சத்தில் முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் வேகப்பந்து வீச்சைத் தலைமை தாங்குவார்கள்.

ரஞ்சி கோப்பை வரலாற்றில் இந்த ஆண்டு ஜம்மு காஷ்மீர் அணி முதன்முறையாகச் சாம்பியன் பட்டம் வென்றது. அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி தார். அந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரரான இவருக்கு, முதன்முறையாக இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரை ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தங்களது இடத்தைத் தக்கவைத்துக் கொள்வார்கள். அதே சமயம், அக்சர் படேலின் இடம் கேள்விக்குறியாக உள்ளது. அவருக்குப் பதிலாக ராஜஸ்தான் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதர் அல்லது ஹர்ஷ் துபே பரிசீலிக்கப்படலாம். விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட் மற்றும் துருவ் ஜூரல் ஆகியோர் தங்களது இடங்களை உறுதி செய்துள்ளனர்.

பேட்டிங் வரிசையில் 3-வது இடத்திற்கு தேவ்தத் படிக்கல் மற்றும் சாய் சுதர்சன் இடையே கடும் போட்டி நிலவுகிறது. சுப்மன் கில் அணியை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தத் தொடர் இளம் வீரர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.

“தோனி ஆடப் போகிறார் ஆனால்..” கதிகலங்க வைத்த அஸ்வின்.. சேப்பாக்கத்தில் கடைசி போட்டி.. அத்துடன் ஓய்வு?

ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டிக்கான உத்தேச இந்திய அணி: சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரல், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, ஆகிப் நபி தார், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், தேவ்தத் படிக்கல், ஹர்ஷ் துபே.

மேலும் செய்திகள்
முக்கிய செய்திகள்
1
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 07 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
2
ரூ.15 லட்சம் கோடி ‘போலி கணக்கு’ காட்டிய நிறுவனத்தில்
செய்திகள் · 23 நிமிடங்கள் முன்னர்
3
தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் களம் இப்போதே சூடுபிட
தலையங்கம் · 35 நிமிடங்கள் முன்னர்
4
நடுவானில் 33,000 அடி உயரத்தில் விமான என்ஜின் வெடித்தும் பயணிகளை க
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
5
பிரிட்டனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கிய இளைஞரால் 18 வயது
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
6
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி விடுத்த நேருக்கு நேர் பேச்சு
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
7
அமெரிக்காவின் மறைந்த தொழிலதிபரும், சிறுமிகளை பாலியல் கடத்தல் செய்
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net