← முகப்பு செய்திகள்

Ind vs AFG-KL Rahul is on the verge of a historic milestone

🕐 13 Jun 2026 📂 செய்திகள் 6 பார்வைகள்
Ind vs AFG-KL Rahul is on the verge of a historic milestone

தர்மசாலா: ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவின் விக்கெட் கீப்பர்-பேட்டராக கே.எல்.ராகுல் செயல்பட்டு வருகிறார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வரவிருக்கும் ஒருநாள் தொடரில், விக்கெட் கீப்பர்-பேட்டராக 2,000 ஒருநாள் ரன்களை பூர்த்தி செய்வதற்கான சிறந்த வாய்ப்பு அவரைத் தேடிவந்துள்ளது.

ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பர்-பேட்டராக 2,000 ரன்களை எட்ட கே.எல்.ராகுலுக்கு இன்னும் 105 ரன்கள் மட்டுமே தேவைப்படுகின்றன.கடந்த சில காலமாக ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் விக்கெட் கீப்பர்-பேட்டராக செயல்பட்டு வரும் கர்நாடகாவைச் சேர்ந்த 34 வயதான வலதுகை பேட்டரான கே.எல்.ராகுல், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விக்கெட் கீப்பராக களம் காணத் தயாராக உள்ளார்.

KL Rahul preparing for the upcoming ODI cricket series

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே ஜூன் 13 அன்று தர்மசாலாவில் தொடங்கவுள்ள முதலாவது இருதரப்பு ஒருநாள் தொடரின் போது, ராகுல் சாதனை புத்தகத்தில் தனது பெயரைப் பதிவு செய்வதற்கான அருமையான வாய்ப்பைப் பெற்றுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ராகுல் குறைந்தபட்சம் 105 ரன்கள் எடுத்தால், ஒருநாள் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர்-பேட்டராக 2,000 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த ராகுல் டிராவிட் மற்றும் எம்.எஸ்.தோனிக்கு அடுத்தபடியாக மூன்றாவது இந்தியர் என்ற சாதனையைப் படைப்பார்.

IND vs AFG: இந்திய அணி பிளேயிங் லெவனில் அறிமுகமாகும் 29 வயது வீரர்.. ஆகாஷ் சோப்ரா கணிப்பு

இந்த மைல்கல்லை எட்டிய முதல் இந்திய வீரர் ராகுல் டிராவிட் ஆவார். அவர் 1999 முதல் 2004 வரை இந்தியாவின் விக்கெட் கீப்பர்-பேட்டராக 73 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2,300 ரன்கள் எடுத்தார். அதே நேரத்தில், எம்.எஸ்.தோனி 2004 முதல் 2019 வரை இந்தியாவின் விக்கெட் கீப்பராக 347 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10,599 ரன்களைக் குவித்துள்ளார்.

கே.எல்.ராகுல் தற்போது விக்கெட் கீப்பர்-பேட்டராக விளையாடிய 54 ஒருநாள் போட்டிகளின் 48 இன்னிங்ஸ்களில் 1,895 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் அவர் இந்த பொறுப்பில் குறைந்தபட்சம் 10 ஒருநாள் இன்னிங்ஸ்களில் விளையாடிய அனைத்து வீரர்களிலும் 57.42 என்ற பேட்டிங் சராசரியுடன் உலகளவில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பர்-பேட்டராக அதிக ரன்கள் குவித்த உலக சாதனையை இலங்கையின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்கார தன் வசம் வைத்துள்ளார். சங்கக்கார 2000 முதல் 2015 வரை இலங்கை அணிக்காக விக்கெட் கீப்பர்-பேட்டராக 360 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 13,341 ரன்களைக் குவித்துள்ளார்.

IND vs AFG: மழையால் டாஸ் தாமதம்.. வெற்றியை குறிவைக்கும் சுப்மன் கில் படை.. சவால் அளிக்கும் ஆப்கான்

விக்கெட் கீப்பர்-பேட்டர்களில் அதிக ஒருநாள் ரன்களை எடுத்தவர்களின் பட்டியலில் சங்கக்காரவிற்கு அடுத்தபடியாக இந்தியாவின் எம்.எஸ்.தோனி உள்ளார். தோனி விக்கெட் கீப்பராக விளையாடிய 350 ஒருநாள் போட்டிகளில் (இந்தியாவுக்காக 347 போட்டிகள் மற்றும் ஆசிய லெவன் அணிக்காக 3 போட்டிகள் உட்பட) மொத்தம் 10,773 ரன்கள் எடுத்துள்ளார். உலகளவில் ஒருநாள் போட்டிகளில் 10,000-க்கும் அதிகமான ரன்களைக் குவித்த ஒரே விக்கெட் கீப்பர்-பேட்டர்கள் சங்கக்கார மற்றும் தோனி ஆகிய இருவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net