தர்மசாலா: கிரிக்கெட் போட்டி என்பது சில நொடிகளில் திசைமாறக்கூடிய சுவாரசியமான விளையாட்டு. ஒரு கேட்சை நழுவ விடுவதோ அல்லது நடுவரின் தவறான முடிவோ ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடும். நவீன கிரிக்கெட்டில் இதுபோன்ற மனிதத் தவறுகளைத் திருத்துவதற்காக 'டிஆர்எஸ்' (Decision Review System) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் மிகத் துல்லியமான கணிப்பு அவசியமாகிறது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது, இந்திய அணி மிக முக்கியமான தருணத்தில் டிஆர்எஸ் எடுக்கத் தவறியது தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்டத்தின் 2.5-வது ஓவரை இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் வீசினார். அப்போது ஆப்கானிஸ்தான் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் களத்தில் இருந்தார். அர்ஷ்தீப் வீசிய அந்தப் பந்து, மிடில் ஸ்டம்பை நோக்கி 'லெந்த்' (Length) டெலிவரியாக வந்து குர்பாஸின் Padஐ பலமாகத் தாக்கியது.

இதையடுத்து, இந்திய வீரர்கள் அனைவரும் நடுவரிடம் முறையீட்டை (LBW) எழுப்பினர். ஆனால், கள நடுவரான நிதின் மேனன் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் பந்து பேட்டில் பட்டதா அல்லது ஸ்டம்புகளுக்கு மேலே உயரமாகச் சென்றதா என்று இந்திய வீரர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.
IND vs AFG: ரோகித் சர்மா ஒருநாள் தொடரில் எவ்வளவு ரன் அடிப்பார்.. தமிழக வீரர் வெளியிட்ட கணிப்பு
நடுவர் அவுட் தர மறுத்ததால், முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, விக்கெட் கீப்பர் இசான் கிஷன் மற்றும் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஆகிய மூவரும் ஆலோசனையில் ஈடுபட்டனர். பந்து கால் மேல் பகுதியில் (Top of the flap) பட்டதால், அது ஸ்டம்ப்க்கு மேலே உயரமாகச் செல்ல வாய்ப்புள்ளது என்று அவர்கள் கருதினர்.
"பந்து ஸ்டம்பை விட உயரமாகச் செல்கிறதா?" என்பதே அவர்களின் முதன்மைச் சந்தேகமாக இருந்தது. இசான் கிஷன் பந்து உயரமாகச் செல்வதாகக் கூற, கேப்டன் கில்லும் அந்த முடிவையே ஏற்றுக்கொண்டார். இறுதியில், இந்தியா டிஆர்எஸ் எடுக்க வேண்டாம் என்று தீர்மானித்தது. ஆனால், அவர்களின் இந்த முடிவு தவறானது என்பது அடுத்த சில நிமிடங்களிலேயே தெரியவந்தது.
தொலைக்காட்சி 'ரீப்ளே' (Replay) ஒளிபரப்பப்பட்டபோது மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். முதலில், பந்து பேட்டில் பட்டதா என்பதைச் சோதிக்கும் 'அல்ட்ரா எட்ஜ்' (Ultra-edge) தொழில்நுட்பம் காட்டப்பட்டது. அதில் பந்து பேட்டில் படவில்லை என்பது உறுதியானது.
அதனைத் தொடர்ந்து, பந்து செல்லும் திசையைக் காட்டும் 'பால் டிராக்கிங்' (Ball Tracking) தொழில்நுட்பம் காண்பிக்கப்பட்டது. அதில், அர்ஷ்தீப் வீசிய பந்து மிடில் ஸ்டம்பின் உச்சியை (Top of middle stump) மிகத் துல்லியமாகத் தாக்குவது தெளிவாகத் தெரிந்தது. ஒருவேளை இந்தியா டிஆர்எஸ் எடுத்திருந்தால், நடுவர் தனது முடிவை மாற்றியிருக்க வேண்டும். அதோடு ஆப்கான் அணியின் முக்கிய விக்கெட்டான குர்பாஸும் ஆட்டமிழந்திருப்பார்.
இந்திய அணி இந்த அரிய வாய்ப்பைத் தவறவிட்டதற்கு பந்தின் 'உயரம்' குறித்த தவறான கணிப்பே முக்கியக் காரணமாகும். அர்ஷ்தீப் சிங் வீசிய பந்து குர்பாஸின் காலில் சற்று உயரமாகப் பட்டது உண்மைதான். ஆனால், குர்பாஸ் கிரீஸை விட்டு சற்று வெளியே தள்ளி நின்றதையும், பந்து ஸ்டம்பை நோக்கித் இறங்கிச் சென்றதையும் இந்திய வீரர்கள் கவனிக்கத் தவறினர்.
பொதுவாக, விக்கெட் கீப்பரே பந்தின் உயரத்தை மிகச் சரியாகக் கணிக்கக்கூடிய நேர்க்கோட்டில் இருப்பார். இத்தகைய சூழலில், இசான் கிஷன் பந்து ஸ்டம்பைத் தாண்டி உயரமாகச் செல்கிறது என்று கணித்தது இந்திய அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது.
குர்பாஸ் போன்ற ஒரு அபாயகரமான அதிரடி ஆட்டக்காரரின் விக்கெட்டை ஆட்டத்தின் தொடக்கத்திலேயே வீழ்த்துவது எளிதல்ல. அத்தகைய பொன்னான வாய்ப்பை இந்தியா தவறவிட்டது ஆப்கானிஸ்தான் அணிக்குச் சாதகமாக மாறியது. பவர் பிளேயிலேயே அந்த விக்கெட் வீழ்ந்திருந்தால், ஆப்கானிஸ்தான் அணி கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும்.
IND vs AFG: 6.5 அடி உயரம்.. அறிமுக போட்டியில் முதல் ஓவரிலேயே விக்கெட் எடுத்த குர்னூர் பிரார்
வெறும் 15 வினாடிகளுக்குள் எடுக்க வேண்டிய ஒரு முடிவு, சில நேரங்களில் ஆட்டத்தின் ஒட்டுமொத்தத் தலைவிதியையே மாற்றிவிடுகிறது. இந்த தருணத்தில் குர்பாஸ் 14 ரன்கள் தான் எடுத்திருந்தார். ஆனால், அவருக்கு வாய்ப்பை பயன்படுத்தி இந்திய பவுலஙாகளை சூளுக்கு எடுத்து 51 பந்துகளில் 102 ரன்கள் குவித்து ஆட்டத்தின் போக்கையே மாற்றி விட்டார்.