← முகப்பு தலையங்கம்

CSK அணியின் நட்சத்திர வீரர் MS Dhoni காயத்திலிருந்து மீண்டு வருகிறார். அவர் விரைவில் மைதானத்துக்கு

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 தலையங்கம் 22 பார்வைகள்
CSK அணியின் நட்சத்திர வீரர் MS Dhoni காயத்திலிருந்து மீண்டு வருகிறார். அவர் விரைவில் மைதானத்துக்கு

CSK அணியின் நட்சத்திர வீரர் MS Dhoni காயத்திலிருந்து மீண்டு வருகிறார். அவர் விரைவில் மைதானத்துக்கு திரும்புவார் என மைக் ஹஸ்ஸி நம்பிக்கை தெரிவித்துள்ளார். IPL 2026 தொடரில் CSK இன்னும் போராடி வருகிறது.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், 5 முறை சாம்பியனான சென்னை அணியின் தற்போதைய நிலை ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது.

இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை, 2 வெற்றிகள் மட்டுமே பெற்று 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.

சமீபத்தில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறும் நிலையில் இருந்தும் தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கால் தசைப்பிடிப்பு காயத்திலிருந்து மீண்டு வரும் தோனி இதுவரை IPL 2026 தொடரில் எந்த போட்டியிலும் விளையாடவில்லை. அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறாரானாலும், பிளேயிங் லெவனில் அவர் எப்போது திரும்புவார் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளரான மைக் ஹஸ்ஸி கூறுகையில், தோனி காயத்திலிருந்து நல்ல முறையில் மீண்டு வருகிறார் என்றும், அவரது பேட்டிங் திறன் குறித்து திருப்தி இருப்பதாகவும் தெரிவித்தார். தற்போது அவர் ரன்னிங் ஃபிட்னஸை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார் என்றும் குறிப்பிட்டார்.

“போட்டியின் கடைசி கட்டங்களில் வேகமாக ஓடி ரன்கள் எடுப்பது மிகவும் முக்கியம். அந்த ஃபிட்னஸை அவர் மீண்டும் பெற முயற்சி செய்கிறார். அவர் விரைவில் மைதானத்துக்கு திரும்புவார் என நம்புகிறோம்,” என ஹஸ்ஸி கூறினார்.

மேலும் செய்திகள்
தலையங்கம்
30 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூன் 8, 2026 அன்று சுக்கிரனும் சந்திரனும் இணைந்து உருவாக்கும் நவபஞ்சம
06 Jun 2026
தலையங்கம்
தமிழகத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா (மாநிலங்களவை) இடைத்தேர்தலில், ஆளும் தவெக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்
38 நிமிடங்கள் முன்னர்
தலையங்கம்
பிரிட்டனின் கில்ட்ஃபோர்ட் (Guildford) பகுதியில் உள்ள சர்ரே பல்கலைக்கழகத்தின் (University of Surrey) வளாகத்தில்
4 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான ஆந்த்ரோபிக் (Anthropic), அதிநவீன ஏஐ
5 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
ஆஸ்திரியா மற்றும் இத்தாலியின் எல்லைப் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் (Alps) பனிமலையில், கடந்த 1991 ஆம்
6 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
யாழ்ப்பாண மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசியல் ஆதாயத்த
10 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net