Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் அவசர இலக்கத்திற்கு (119) வந்த அழைப்பை அடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்ற வேளை, இளைஞன் உயிரிழந்த சம்பவத்தில் , உயிரிழந்த இளைஞன் அதீத போதை காரணமாகவே உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது
அந்நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் , மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பொலிசாரின் 119 தொலைபேசி இலக்கத்திற்கு நபர் நேற்று முன்தினம் சனிக்கிழமை அதிகாலை 01.30 மணியளவில் அழைப்பினை மேற்கொண்டு , அவசரமாக பொலிசாரின் உதவியை நாடுவதாக தெரிவித்துள்ளார்.
அதனை அடுத்து , யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் நடமாடும் (மொபைல்) சேவையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழு , தொலைபேசி அழைப்பில் கூறப்பட்ட வீட்டின் முகவரியை கண்டறிந்து அங்கு விரைந்துள்ளனர்.
அங்கு பொலிஸார் சென்ற வேளை இளைஞன் ஒருவர் சுயநினைவற்ற நிலையில் காணப்பட்டமையை அடுத்து , நோயாளர் காவு வண்டிக்கு அறிவிக்கப்பட்டு , நோயாளர் காவு வண்டி மூலம் இளைஞனை வைத்தியசாலைக்கு அழைத்து சென்று, யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சில மணி நேரத்திலையே வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , இளைஞனின் பெற்றோர்கள் கடந்த 16ஆம் திகதி மட்டக்களப்பில் உள்ள உறவினர் வீடொன்றில் நடைபெற்ற நிகழ்வுக்காக சென்றுள்ளனர்.
வீட்டில் உயிரிழந்த இளைஞனும் , இளைஞனின் சகோதரனுமே தங்கி இருந்துள்ளனர். அந்நிலையில், நேற்று முன்தினம் சனிக்கிழமை சகோதரர்கள் இருவரும் தமது நண்பர்களை வீட்டுக்கு அழைத்து மது விருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நள்ளிரவு நேரம் நண்பர்கள் சென்ற நிலையில் , சகோதரர்கள் இருவரும் வீட்டில் இருந்த வேளை , அதிகாலை உயிரிழந்த இளைஞனை காணவில்லை என சகோதரன் தேடியுள்ளார்.
அவ்வேளை வீட்டின் வெளி வளவில் தனது சகோதரன் சுயநினைவற்ற நிலையில் விழுந்து காணப்பட்டமையால் , பொலிசாரின் அவசர இலக்கத்திற்கு அழைப்பு எடுத்து பொலிசரின் உதவியை நாடியுள்ளார் என பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.