← முகப்பு செய்திகள்

கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம்

🕐 05 May 2026 📂 செய்திகள் 82 பார்வைகள்
கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம்

கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்ட புதிய உறுப்பினர்கள் நால்வரும் நேற்று (04) சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் முன்னிலையில் இரகசியம் பேணுவதற்கான சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர்.

முன்னாள் கணக்காய்வாளர் தலைமையதிபதி காமினி விஜேசிங்க, முன்னாள் பிரதிக் கணக்காய்வாளர் தலைமையதிபதி ஜீ.தேவஞானன், ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஹால் சுனில் ராஜபக்ஷ மற்றும் அரசாங்க சேவையின் ஓய்வுபெற்ற அதிகாரி ரத்ன தேசப்பிரிய ஆகியோர் கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக இவ்வாறு இரகசியத் தன்மையைப் பேணுவதற்கான சத்தியம் செய்துகொண்டனர்.

2018ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 9வது பிரிவுக்கு அமைய அல்லது பாராளுமன்றம் உத்தரவிடும் சந்தர்ப்பத்தில் அல்லது 2018ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் (09) (அ) ஆம் பிரிவு ஆகிய எழுதப்பட்ட சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டிருந்தாலே தவிர, கணக்காய்வு தொடர்பான தகவல்களை அரசாங்க அல்லது தனியார் துறையில் உள்ள எந்தவொரு நபருக்கும், எந்தவொரு முறையிலும் வெளிப்படுத்தும் வகையில் கலந்துரையாடல்களை அல்லது வெளிப்படுத்தல்களை மேற்கொள்ள மாட்டோம் என இரகசிய தன்மையைப் பேணுவதற்கான சத்தியம் செய்யப்பட்டது.

கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் தலைவரும், கணக்காய்வு தலைமையதிபதியுமான சமுதிகா ஜயரத்ன, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளர் எம்.ஜயலத் பெரேரா உள்ளிட்ட

அதிகாரிகளும் இதன்போது இணைந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்
செய்திகள்
KS Bharat has officially retired from international cricket at the age of
4 மணி நேரம் முன்னர்
செய்திகள்
சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்து முதல் ஆளாக காங்கிரஸ்
7 மணி நேரம் முன்னர்
செய்திகள்
ஜூன் 8-ம் நடக்கும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அறிவித்துள்ளதால், திமுக கூட்டணியில்
7 மணி நேரம் முன்னர்
செய்திகள்
வடகொரிய அதிபரின் மகளான இளவரசி ஜூஏ, அந்நாட்டு Gen-Z இளைஞர்கள் மத்தியில் ஸ்டைல் ஐகானாக மாறியுள்ளார்.
8 மணி நேரம் முன்னர்
செய்திகள்
IND vs AFG Test: Why Rishabh Pant Lost Test Vice-Captaincy? Assistant coach
8 மணி நேரம் முன்னர்
செய்திகள்
மின்வாரிய அலுவலகத்தில் Hard Disk-கள் திருட்டு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி உண்மையை கொண்டு வர
8 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
100 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 11 அன்று புதன் மற்றும் சுக்கிரன் ஒர
2
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 05 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
3
லிங்க்ட்இன் (LinkedIn), இன்டீட் (Indeed) மற்றும் அப்வொர்க் (Upwor
தலையங்கம் · 38 நிமிடங்கள் முன்னர்
4
உக்ரைன் மீதான போரைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாத
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
5
ஃபிராங்பர்ட் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பெரிய ஜெட்
பதிவு · 2 மணி நேரம் முன்னர்
6
Rare Planetary Transit On 11 June 2026 After 100 Years: ஜூன் 11
இன்றைய ராசிபலன் · 2 மணி நேரம் முன்னர்
7
உலக அரங்கில் எப்போதுமே கணிக்க முடியாத அதிரடி அரசியல் ஆட்டங்களை ஆட
தலையங்கம் · 4 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net