‘டித்வா’ பேரனர்த்தத்தினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டியது மிக அவசியம் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்க
மேலும் சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்தமானது கட்டமைப்பு ரீதியான இடைவெளிகளையும், சமத்துவமின்மையையும் தோற்றுவித்துள்ளது. ஆகவே மக்களின் தேவைகள் தொடர்பான மதிப்பீட்டையும் விரைந்து மேற்கொள்வது அவசியம் என்றார்.
கடந்த நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட ‘டித்வா’ சூறாவளியினால் மலையக பகுதிகள் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த வார இறுதியில் பதுளை மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டு, அங்கு களநிலைவரங்களைப் பார்வையிட்டதன் பின்னர் வெளியிட்டுள்ள காணொளியிலேயே வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ-பிரான்சே மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.