← முகப்பு செய்திகள்

3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதல்வர் விஜய், அங்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை,

🕐 10 நிமிடங்கள் முன்னர் 📂 செய்திகள் 10 பார்வைகள்
3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதல்வர் விஜய், அங்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை,
ஜனாதிபதி துணை ஜனாதிபதியுடன் சந்திப்பு

முதல்வராக பதவியேற்ற பிறகு இரண்டாவது முறையாக முதல்வர் விஜய் டெல்லி சென்றுள்ளார். முதல்முறையாக கடந்த மே 27-ஆம் தேதி முதல்வா் விஜய், தில்லி சென்று பிரதமா் மோடியை சந்தித்தாா். அப்போது, கா்நாடக அரசு திட்டமிட்டுள்ள மேக்கேதாட்டு அணை திட்டத்தை அனுமதிக்கக்கூடாது, தமிழக அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்தாய் வாழ்த்து முதலில் பாடப்படவேண்டும், தமிழக மீனவா் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.

இரண்டாவது முறையாக டெல்லி சென்று முதல்வர் விஜய், மூன்று அங்கே தங்கி இருக்கிறார். இன்றைய தினம் மாலை 4 மணியளவில் ஜனாதிபதி திரெளபதி முர்முவை மரியாதை நிமித்தமாக முதல்வர் விஜய் சந்தித்து பேசியிருந்தார். இதனை தொடர்ந்து துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணனையும் முதல்வர் விஜய் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். மாலை 6.30 மணியளவில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை முதல்வர் விஜய் சந்திக்க உள்ளார்.

நாளைய தினம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் கலந்து கொள்ள உள்ளார். இதில் தமிழகத்திற்கான நித தேவைகள் குறித்து, மத்திய அரசு நிலுவை வைத்துள்ள நிதிகள் தொடர்பாக வலியுறுத்தி விஜய் பேசுவார் என தெரிகிறது. இதன் பின்னர், நாளை மறுநாள் உடுப்பி செல்லும் முதல்வர் விஜய், அங்கு மூகாம்பிகை கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net