பிரிட்டன் பொதுத்தேர்தலை முன்னதாகவே நடத்த ரிஷி சுனக் முடிவு செய்தது ஏன்?

பிரிட்டன் பொதுத்தேர்தல், ரிஷி சுனக்

பட மூலாதாரம், Reuters

  • எழுதியவர், கிறிஸ் மேசன்
  • பதவி, அரசியல் செய்தி ஆசிரியர், பிபிசி செய்திகள்

சர்வதேச அளவில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பிரிட்டன் தேர்தல் குறித்த அறிவிப்பை ரிஷி சுனக் வெளியிட்டுள்ளார். அதன்படி வரும் ஜூலை 4-ஆம் தேதி பிரிட்டன் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.

புதன்கிழமை தனது டவுனிங் ஸ்ட்ரீட் அலுவலகத்திற்கு வெளியே நின்று, மழையில் நனைந்தபடி உரையாற்றிய பிரதமர் ரிஷி சுனக், “தேர்தலில் ஒவ்வொரு வாக்கிற்காகவும் கடுமையான போராடுவேன். கன்சர்வேடிவ் கட்சிக்காக ஐந்தாவது முறையாக பதவியேற்க வேண்டும்,” என்றார்.

இலையுதிர் காலத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று பல தரப்பினர் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது. அதன்படி அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் தேர்தல் அறிவிக்கப் பட்டிருந்தால் கன்சர்வேடிவ் கட்சிக்கு எதிர்கட்சியான தொழிலாளர் கட்சியை வீழ்த்த கால அவகாசம் அதிகமாக இருந்திருக்கும் என்று அக்கட்சியினர் கருதினர். மேலும், பொருளாதாரக் கண்ணோட்டத்தை மேம்படுத்த பிரதமருக்கு அதிக வாய்ப்பைக் கொடுக்கும் என்று நம்பினர். ஆனால் இந்த எதிர்பார்ப்புகளை முறியடிக்கும் விதமாக ரிஷி சுனக் முன்னதாகவே பொது தேர்தல் தேதியை அறிவித்திருக்கிறார்.

பிரிட்டன் தேர்தலில் போட்டியிடும் தொழிலாளர் கட்சி (Labour Party) தலைவர் சர் கியர் ஸ்டார்மர், “கன்சர்வேடிவ் கட்சியின் குழப்பங்களில் இருந்து விலகி இருங்கள். இது மாற்றத்திற்கான நேரம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

தேசியக் கருத்துக் கணிப்புகளில் தொழிற்கட்சிக்கு பெரிய அளவில் ஆதரவு கிடைத்துள்ளது. மேலும் அக்கட்சி முழுமையாக ஒழுங்கமைக்கப்பட்ட பிரசாரத்துக்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அதிகாரப்பூர்வ ஐந்து வார தேர்தல் பிரசாரம் தொடங்க உள்ள நிலையில், அடுத்த வாரம் வியாழன் அன்று முறையாக பாராளுமன்ற செயல்பாடுகள் நிறுத்தப்படுவதற்கு முன்னதாக வெள்ளிக்கிழமை இடை நிறுத்தப்படுகிறது.

எனவே நிலுவையில் உள்ள சட்டங்களை நிறைவேற்ற ரிஷி சுனக் கட்சிக்கு இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது – இதனால் அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள் கைவிடப்பட நேரிடும்.

பிரிட்டன் பொதுத்தேர்தல், ரிஷி சுனக்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் தொழிலாள்ர் கட்சித் தலைவர் கியர் ஸ்டார்மர்

‘இப்போதே தேர்தல் நடத்துங்கள் அல்லது நிலைமை மோசமாகிவிடும்’

சில தினங்களுக்கு முன்பு பிரிட்டன் கோடைகால தேர்தலைப் பற்றிய உரையாடலின் போது ஒரு மூத்த அரசாங்கப் பிரமுகர் ​​’தேர்தல் குறித்து உற்சாகமடைய எந்த காரணமும் இல்லை’ என்று என்னிடம் கூறினார்.

நான் நேற்று மற்றொரு மூத்த கன்சர்வேடிவ் கட்சி பிரமுகருடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உரையாடினேன், அவர் தற்போது நடக்கும் எந்த சம்பவத்தை பற்றியும் பேசாமல் மிக நீண்ட பிரசாரத்தை பற்றி மட்டுமே பேசினார்.

ஆனால் அக்கட்சியில் அனைவரும் இதே மனநிலையில் இல்லை.

தேர்தல் தேதி குறித்த முடிவுகள் நிர்ப்பந்தத்தின் பேரில் எடுக்கப்பட்டதாக இருக்கலாம். மேலும் ரிஷி சுனக்கிடம் சீக்கிரமாக தேர்தல் அறிவிக்குமாறு தூண்டுபவர்களும் உள்ளன., அவர்களில் துணைப் பிரதமர் ஆலிவர் டவுடனும் ஒருவர்.

முன்கூட்டியே, கோடை காலத்தில் தேர்தல் அறிவிக்கும் வாதத்தை முன் வைத்தவர்கள், “கட்சி செயல்பாடுகள் பெரிதாக முன்னேறாமல் போகலாம். வாக்காளர்கள் விருப்பத்திற்கு ஏற்ப விரைவாக தேர்தல் அறிவிக்காவிட்டால், கன்சர்வேடிவ் கட்சியின் தோல்விக்கு வழிவகுக்கும். எனவே அவர்கள் விருப்பத்தின்படி விரைவில் தேர்தல் அறிவிக்க வேண்டும்,” என்று கருதினர்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், “இப்போதே நடத்துங்கள் அல்லது நிலைமை மோசமாகிவிடும்,” என்றனர்.

பிரிட்டன் பொதுத்தேர்தல், ரிஷி சுனக்

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, கருத்துக் கணிப்புகள் சரியாக இருந்தால் ஆட்சி மாற்றம் நடக்கும்

பணவீக்கத்தைச் சமாளித்தது தேர்தலில் பிரதிபலிக்குமா?

பிரதமர் தனது நோக்கங்களில் சிலவற்றையாவது நிறைவேற்றுவதாகச் சுட்டிக்காட்டலாம், அல்லது விரைவில் நிறைவேறும் நம்பிக்கையைக் கொடுக்கலாம். இன்றைய பணவீக்க நிலை சீரடைந்திருப்பது இந்த அரசாங்கத்தின் வெற்றி எனக் கூறப்பட முடியும்.

நிச்சயமாக, பணவீக்கம் குறைந்தது முழுமையாக அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் மட்டும் நடக்கவில்லை. ஆனால் பணவீக்கம் வானளவு உயரும் போது அரசாங்கங்கள் குற்றம் சாட்டப் படுகின்றன, எனவே அது வீழ்ச்சியடையும் போது அரசாங்கம் சில கடன்களை தள்ளுபடி செய்வார்கள் என்று மக்கள் எதிர்பார்ப்பது நியாயமானது. நாட்டின் பொருளாதாரம் கொஞ்சம் பிரகாசமாகத் தோன்றுகிறது.

இதனிடையே புகலிடம் கோரும் புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு அனுப்பும் திட்டமும் கிடப்பில் உள்ளது. இதுவரை செயல்படுத்தப்படவில்லை. ஒருவேளை தேர்தல் பிரசாரத்தின் போது கூட விமானங்கள் வரலாம் என்று தோன்றுகிறது. எது எப்படியாயினும், இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் தேர்தல் சமயத்தில் பிரதமருக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

தேர்தல் பிரசாரம் துவங்கியுள்ளது.

கன்சர்வேடிவ் கட்சியினர் மக்களிடத்தில் மீண்டும் மீண்டும் ஒரே விஷயத்தை தான் கூறுவார்கள்: “நீங்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள், உங்கள் விருப்பம் என்ன என்பதில் கவனமாக இருங்கள்”. அதே சமயம் தொழிலாளர் கட்சியினர், “இது மாற்றத்திற்கான நேரம்” என்று கூறுவார்கள்.

என்ன நடந்தாலும் விளைவு ஏதோ ஒன்றாகத் தான் இருக்கும்.

கருத்துக் கணிப்புகள் சரியாக இருந்தால் ஆட்சி மாற்றம் நடக்கும். அவை தவறானவை என்றால் வருத்தம் தரக் கூடிய மிகப்பெரிய சம்பவம் நிகழும்.