சூடான் உள்நாட்டுப் போர் – “எங்கள் தேவாலயம் அழிக்கப்படும் என நினைக்கவில்லை”

காணொளிக் குறிப்பு, சூடான் உள்நாட்டுப் போர் – “எங்கள் தேவாலயம் அழிக்கப்படும் என நினைக்கவில்லை”

சூடான் உள்நாட்டுப் போர் – “எங்கள் தேவாலயம் அழிக்கப்படும் என நினைக்கவில்லை”

சூடான் ஓம்டுர்மனில் நிகழ்ந்த தாக்குதலில் இருந்து தன் மூன்று குழந்தைகளுடன் சாரா தப்பித்தார். நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ குடும்பங்களுடன் போர்ட் சூடானில் உள்ள இந்த தேவாலயத்தில் சாரா அடைக்கலம் புகுந்தார். போர் முடிவுக்கு வரவும், தாங்கள் வீடு திரும்பவும் அவர்கள் இப்போது வேண்டுகின்றனர்.

ஓராண்டாக நீடிக்கும் போரால் நாடு முழுவதும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. சுமார் 80 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். சாரா உட்பட பல கிறித்தவ குடும்பங்கள் வழிபடும் ஓம்டுர்மனில் உள்ள தேவாலயத்தில் ஏற்பட்டுள்ள அழிவை பிபிசி கண்டது.

ஆர்.எஸ்.எஃப் எனப்படும் அவசர உதவிப் படையுடன் தொடர்புடைய சீருடையை அணிந்த நபர்கள், போரின் ஆரம்ப நாட்களில் தேவாலயத்தைத் தாக்கியதாக அதனை நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர். அதை ஆர்.எஸ்.எஃப் மறுத்துள்ளது. தேவாலயத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை, அந்த தேவாலயத்தில் வழிபாடு செய்யும் சால்வாவிடம் காண்பித்தோம்.

சூடானில் உள்ள பெரும்பாலான கிறித்துவர்கள் எகிப்துக்கு தப்பிச் சென்றுள்ளனர். போர்ட் சூடானில் அடைக்கலம் புகுந்தவர்கள், விரைவில் எகிப்துக்கு சென்று அவர்களுடன் இணைய முடியும் என்று நம்புகின்றனர்.