ஆஸ்ரேலியாவில் காவல்துறையால் சிறுவன் சுட்டுக்கொலை!!

by admin

ஆஸ்ரேலியாவின் பேர்த் (Perth) பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க ஒருவரைக் கத்தியால் குத்திய 16 வயதுச் சிறுவன் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் சனிக்கிழமை இரவு வில்லெட்டனில் உள்ள ஹார்டுவேர் கடையின் வாகன நிறுத்துமிடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தாக்குதல் நடத்தியவர் காவல்துறையினருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து வன்முறைச் செயல்களில் ஈடுபடப்போவதாக எச்சரித்தாக மாநிலக் காவல்துறை ஆணையாளர் கர்னல் பிளான்ச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வில்லெட்டனில் ஒரு ஆண் கத்தியுடன் கார் நிறுத்துமிடத்தில் ஓடுகிறார் என்று இரண்டாவது தொலைபேசி அழைப்பு காவல்துறைக்கு வந்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் கத்தியைக் கீழே போடுமாறு இளைஞனிடம் கோரியபோது தாக்குதலாளி அக்கோரிக்கையை மறுக்கிறார். பின்னர் காவல்துறையினர் அவரைக் சுட்டுக்கொன்றனர்.

கார் தரிப்பிடத்தில் முதுகில் குத்தப்பட்ட நிலையில் பெண் ஒருவர் காயங்களுடன் மீட்க்பபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த தாக்குதல் பயங்கரவாதத்தின் அடையாளங்கள் என்று காவல்துறையும் ஒப்புக்கொண்டது. ஆனால் இன்னும் பயங்கரவாத செயலாக அறிவிக்கப்படவில்லை. அவர் தனியாக இயங்கியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதற்கு முன்னர் சிட்னி கடற்கரை புறநகர்ப் பகுதியான போண்டியில் உள்ள வணிக வளாகத்தில் 6 பேர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டமை நினைவூட்டத்தக்கது.

ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி மற்றும் கத்தி குற்றம் அரிதாகக் கருதப்படுகிறது. இது உலகின் பாதுகாப்பான நாடுகளில் தொடர்ந்து கத்திக்குத்துத் தாக்குதல்கள் இடம்பிடித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்