கொங்கோவில் இடம்பெயர்ந்த முகாங்களில் குண்டு வெடிப்பு: 12 பேர் பலி!

by admin

கிழக்கு கொங்கோ ஜனநாயகக் குடியரசில் இடம்பெயர்ந்த மக்களுக்கான இரண்டு முகாங்களில் நடந்த குண்டு வெடிப்பில் குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தர்.

வடக்கு கிவு மாகாணத்தின் தலைநகரான கோமா நகருக்கு அருகில் உள்ள லாக் வெர்ட் மற்றும் முகுங்கா ஆகிய இடங்களில் உள்ள முகாம்களை குறிவைத்து வெள்ளிக்கிழமை வெடிப்புகள் நடந்ததாக ஐநா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல்கள், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களின் அப்பட்டமான மீறல் மற்றும் ஒரு போர்க் குற்றமாக இருக்கலாம் அந்த அறிக்கை கூறியது.

பாதிக்கப்பட்டவர்களில் பலர் அப்பகுதி தாக்கப்பட்டபோது தங்கள் கூடாரங்களில் தூங்கிக் கொண்டிருந்ததாக கூறினார்.

கொங்கோ இராணுவமும் அமெரிக்காவும் அண்டை நாடான ருவாண்டாவில் உள்ள இராணுவம் மற்றும் M23 கிளர்ச்சிக் குழு தாக்குதல்களின் பின்னணியில் இருப்பதாக குற்றம் சாட்டின.

இக்குற்றச்சாட்டை மறுத்த ருவாண்டா பாதுகாப்புப் படை இது கேலிக்குரியது எனக் கூறியது.

சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ருவாண்டா குழுவிற்கு ஆதரவளிப்பதாக DRC, UN மற்றும் மேற்கத்திய நாடுகள் தெரிவித்துள்ளன. இந்த குற்றச்சாட்டுகளை ருவாண்டா மறுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்