ரணில் அலுவலகத்திலும் சுருட்டல்!

by admin

இலங்கை ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றி வருவதாக கூறி பொது மக்களை ஏமாற்றும் நபர்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்கள், வேலை தேடுபவர்கள் மற்றும் வீசா விண்ணப்பதாரர்களை இலக்கு வைத்து இந்த மோசடிகள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் பதவிகளை வகிப்பதாகக் கூறி போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து மோசடியான முறையில் பணத்தைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு  தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்