டைட்டானிக்கில் மீட்கப்பட்ட தங்கக் கடிகாரம் $1,46 மில்லியனுக்கு விற்பனையாது!!

by admin

டைட்டானிக் கப்பலில் பயணித்த பணக்காரர் ஒருவர் வைத்திருந்து ஒரு சட்டைப்பைக் கடிகாரம் 1,46 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டது. 

இது முன்னைய ஏல விற்பனையின் மதிப்பீட்டை முறியடித்தது. இக் கடிகாரத்தை £100,000 தொடக்கம் £150,000 வரை விற்கப்படும் என்று  ஏல நிறுவனமான ஹென்றி ஆல்ட்ரிட்ஜ் அன் சன் கணித்திருந்தது.

ஏப்ரல் 1912 இல் டைட்டானிக் மூழ்கிய பல நாட்களுக்குப் பின்னர் மீட்கப்பட்டபோது ​​JJA இன் முதலெழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கடிகாரம், ஆஸ்டரின் உடலுடன் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அவரிடம் ஒரு வைர மோதிரம், தங்கம் மற்றும் சட்டையில் கைப் பகுதியின் வைரப் பொத்தான்கள், 225 பவுண்டுகள் மற்றும் 2,440 டொலர்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

டைட்டானிக் கப்பலில் இருந்த பணக்காரப் பயணியாக ஆஸ்டர் நன்கு அறியப்பட்டவர் மற்றும் அந்த நேரத்தில் உலகின் பணக்காரர்களில் ஒருவராக கருதப்பட்டார். ஆஸ்டர் தனது கர்ப்பிணி மனைவியை கடைசி லைஃப் படகில் தப்ப உதவியதால் இறந்தார். மேலும் அவரது மனைவி விபத்தில் இருந்து தப்பினார்.

இவரிடம் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களில் விலை இன்றைய காலத்தில் $87 மில்லியன் என ஏல நிறுவம் குறிப்பிட்டுள்ளது.

டைட்டானிக் கப்பல் மூழ்கியபோது இசைக்கப்பட்ட வயலின் 2013 ஆம் ஆண்டு £1.1 மில்லியன் பவுண்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டது து என்று ஏலதாரர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்