தேர்தல்

இந்திய நாடாளுமன்றத் தேர்தல், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பதற்றம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்தப் பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.

Got a TV Licence?

You need one to watch live TV on any channel or device, and BBC programmes on iPlayer. It’s the law.

Find out more

நேரடிச் செய்தி

இங்கு பிரசுரிக்கப்பட்ட நேரங்கள் அனைத்தும் பிரிட்டன் நேரமே

  1. ‘நாடற்ற பெண்ணாக இருந்தேன்’ – இந்திய தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கைத் தமிழர்

    நாடாளுமன்றத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப் பதிவில் இலங்கைத் தமிழர் பெண் ஒருவர் தமிழ்நாட்டில் முதல்முறையாக வாக்களிக்க இருக்கிறார். இது சாத்தியமானது எப்படி? முழு விவரம்

    மேலும் படிக்க

    next

  2. குற்றாலம்: வாக்குப் பதிவையொட்டி வெளியூர் நபர்கள் தங்கியுள்ளனரா என காவல்துறையினர் சோதனை

    குற்றாலம்: வெளியூர் நபர்கள் தங்கியுள்ளனரா என காவல்துறையினர் சோதனை

    Copyright: BBC

    மக்களவைத் தேர்தலையொட்டி தென்காசியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு விடுதிகளில் வெளியூர் நபர்கள் தங்கியுள்ளனரா என்பது குறித்து திடீர் சோதனையை மேற்கொண்டார்.

    தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது. அந்த வகையில், தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக, அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தங்களது தீவிர பிரசாரத்தை நிறைவு செய்துள்ளனர்.

    தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி வெளியூர்களில் இருந்து வரவழைக்கப்பட்ட அரசியல் பிரமுகர்கள், கட்சித் தொண்டர்கள், ஊர்வலம் மற்றும் பிரசாரத்திற்காக வந்த கட்சித் தொண்டர்கள் உள்ளிட்டோர் மண்டபம், விடுதிகள் (Lodges) போன்றவற்றில் தங்கியுள்ள வெளியூர் நபர்கள் அனைவரும் தொகுதியை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டது.

    குற்றாலம்: வெளியூர் நபர்கள் தங்கியுள்ளனரா என காவல்துறையினர் சோதனை

    Copyright: BBC

    இந்நிலையில், தென்காசி நகர் பகுதி மற்றும் குற்றாலம் உள்ளிட்ட இடங்களில் காவல் துணை கண்காணிப்பாளர் நாக சங்கர் தலைமையிலான காவல்துறையினர் விடுதிகளில் வெளியூர் நபர்கள் தங்கியுள்ளனரா என்பது குறித்து இரவு நேரத்தில் திடீர் சோதனையை மேற்கொண்டார். மேலும், வெளியூர் நபர்களை தேர்தல் நடத்தை விதிமுறைப்படி தொகுதியை விட்டு வெளியேறுமாறும் அறிவுறுத்தினார்.

  3. நாடாளுமன்ற தேர்தல் 2024: தமிழ்நாட்டில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன? தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்

    பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் என்னென்ன? - தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்

    Copyright: DIPR

    தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு நாளை காலை ஏழு மணிக்குத் துவங்குகிறது. 3.32 லட்சம் தேர்தல் அலுவலர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார்.

    இந்திய நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு நாளை நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் இந்த முதல் கட்டத்திலேயே வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலுக்கு தமிழ்நாட்டில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார்.

    இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தேர்தல் தொடர்பான புள்ளிவிவரங்களையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தெரிவித்தார்

    பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் என்னென்ன?: தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்

    Copyright: Getty Images

    Image caption: சித்தரிப்புப் படம்

    “தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு காலை ஏழு மணி முதல் மாலை ஆறு மணி வரை நடைபெறவிருக்கிறது. மாநிலத்தில் மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.06 கோடி பேர் ஆண்கள். 3.17 கோடி பேர் பெண்கள். 8,467 பேர் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள். 18-19 வயதுக்கு உட்பட்ட, முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம். மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை 4,61,771. 85 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 6,14,002. ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் 3.32 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

    இந்தத் தேர்தலில் பாதுகாப்புப் பணிக்காக 190 கம்பனி மத்திய ஆயுத காவல் படையினர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். வாக்குப் பதிவு முடிந்த பிறகு 15 கம்பனி வீரர்கள் மட்டும் வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பதற்காக தமிழ்நாட்டில் இருந்துவிட, பிறர் திரும்பிச் செல்வார்கள்.

    தமிழ்நாட்டில் மொத்தமாக 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகவும் 181 வாக்குச் சாவடிகள் மிகப் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

    இதுவரை நடந்த சோதனைகளில் ஏப்ரல் 17ஆம் தேதி இரவு வரை ரொக்கமாக 173.85 கோடி ரூபாய் பிடிபட்டுள்ளது. 6.67 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 1.13 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 1,083 கோடி ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த உலோகங்கள் (தங்கம், வெள்ளி) பிடிபட்டுள்ளன.

    பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் என்னென்ன? - தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்

    Copyright: Getty Images

    மார்ச் 27ஆம் தேதிவரை வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க விண்ணப்பித்தவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 26,50,943 பேருக்குப் புதிதாக வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இருந்தபோதும் பிற அடையாள அட்டைகளையும் வாக்களிக்கப் பயன்படுத்த முடியும்.

    இந்தத் தேர்தலில் காவல் பணிகளுக்காக சுமார் ஒரு லட்சம் காவல் துறையினர் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். முன்னாள் ராணுவத்தினர் 12,220 பேரும் ஓய்வுபெற்ற காவலர்கள் 1,931 பேரும் கர்நாடகா, ஆந்திரா காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள் 3,500 பேரும் கூடுதலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

    இவர்கள் தவிர, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஊர்க்காவல் படையின 2,500 பேரும் தெலுங்கானாவை சேர்ந்த ஊர்க்காவல் படையினர் 2000 பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இந்தத் தேர்தலில் 1,58,568 வாக்குப் பதிவு இயந்திரங்களும் 86,157 கன்ட்ரோல் யூனிட்களும் பயன்படுத்தப்படும்.

    பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் என்னென்ன? - தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்

    Copyright: Getty Images

    விளவங்கோடு இடைத் தேர்தலில் 325 வாக்குப் பதிவு இயந்திரங்களும் 326 கட்டுப்பாட்டு மையங்களும் பயன்படுத்தப்படும். மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 85 வயதுக்கு மேற்பட்டவர்களோடு, சான்றிதழ் வைத்துள்ள மாற்றுத் திறனாளிகளோ வாக்குச் சாவடிக்கு வருவதற்கு மாநில அரசின் பேருந்துகளைப் பயன்படுத்தினால், கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

    தேவைப்பட்டால், 1950 என்ற எண்ணை அழுத்தி, வாகன வசதிகளையும் ஏற்பாடு செய்துகொள்ளலாம். மேலும் அவர்களுக்கு வாக்குச் சாவடிகளில் முன்னுரிமை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் தலா ஒரு வாக்குச் சாவடி, முழுமையாக பெண் அலுவலர்களால் இயக்கப்படும். மாநிலம் முழுவதிலும் உள்ள வாக்குப் பதிவு அலுவலர்களில் 70 சதவீதம் பேர் பெண்களாகவே இருப்பார்கள்.

    தேர்தல் காலகட்டத்தில் பெரும் தொகையை எடுத்துச் செல்வதற்கான கட்டுப்பாடுகள் எல்லா இடங்களிலும் வாக்குப் பதிவு நிறைவடையும் வரை நீடிக்கும். இருந்தபோதும், உரிய ஆவணங்கள் இருந்தால், அந்தப் பணத்தையோ, பொருட்களையோ பறிமுதல் செய்ய வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.

  4. அறிவியல்: சூரிய குடும்பத்தின் ‘குட்டி கோளான’ புதன் பூமியைப் போல பெரிதாக இருந்ததா?

    புதன் கோள்: சூரிய குடும்பத்தில் உள்ள இந்த மிகச்சிறிய கிரகம் ஒரு காலத்தில் பூமியைப் போல் பெரிதாக இருந்ததா?

    புதன் கிரகம் ஆச்சரியங்கள் நிறைந்தது. கிரகத்தின் தோற்றமும் இதற்குக் குறைந்தது அல்ல. ஆரம்பத்தில் பூமியைப் போல பெரிய அளவில் இருந்த இந்தக் கோள் எப்படி இவ்வளவு மிகச் சிறிய கோளாக மாறியது? அதுகுறித்த ஆய்வுகள் கூறுவது என்ன?

    மேலும் படிக்க

    next

  5. இரான் தாக்குதல்: இஸ்ரேலின் தற்காப்புக்கு முஸ்லிம் நாடான ஜோர்டான் வந்ததன் பின்னணி

    இஸ்ரேல், இரான், ஜோர்டான்

    இஸ்ரேலுக்கு எதிரான இரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய நாடான ஜோர்டானும் சுட்டு வீழ்த்திய சம்பவம், பாகிஸ்தான் உள்ளிட்ட உலகின் பல்வேறு இஸ்லாமிய நாடுகளிலும், ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் ஜோர்டானை விமர்சிக்கவும் செய்தனர். ஏன்?

    மேலும் படிக்க

    next

  6. கோவையில் பா.ஜ.க-வினரிடம் இருந்து ரூ.81,000 பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்

    கோவையில் பா.ஜ.க-வினரிடம் இருந்து ரூ.81,000 பணம் பறிமுதல்

    Copyright: BBC

    கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூலுவபட்டி பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்படுவதாக மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு (புதன்கிழமை ஏப்ரல் 17) தகவல் வந்துள்ளது.

    அத்தகவலின் அடிப்படையில், தேர்தல் பறக்கும் படை குழு சோதனையில் ஈடுபட்டனர்.

    பூலுவபட்டியில் ஒரு டீக்கடையில் வார்டு வாரியாக வாக்காளர்களுக்கு பணம் வழங்க நோட்டில் பிரித்து எழுதிக் கொண்டிருந்த நபர்களை பறக்கும் படையினர் நள்ளிரவு பிடித்தனர்.

    தொடர் சோதனையில், ஆலந்துறை பாஜக-வின் மண்டல் தலைவர் ஜோதிமணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ.81,000 பணத்தை கைப்பற்றி, பேரூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணத்தை ஒப்படைத்தனர்.

    அவர்களிடமிருந்து வாக்காளரின் பெயர், முகவரி அடங்கிய பூத் ஸ்லீப்பையும் கைப்பற்றினர்.

    இதைத்தொடர்ந்து ஜோதிமணி மற்றும் பாஜக மாநகர் மாவட்ட செயலாளர் மாரிமுத்து ஆகியோர் தாங்கள் விவசாயிகள் என பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சரியான விளக்கம் கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளுமாறு பறக்கும் படையினர் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

    நீங்கள் ரூ.50,000-க்கு மேல் எடுத்துச் சென்ற பணத்தை பறக்கும் படை பறிமுதல் செய்தால் மீட்பது எப்படி? முழுமையான தகவல் இங்கே.

  7. ‘ஐ.நா. சபை பாதுகாப்பு அவையில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராவதை அமெரிக்கா ஆதரிக்கிறது’

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், அமெரிக்கா, இந்தியா, எலோன் மஸ்க்

    Copyright: Getty Images

    Image caption: வேதாந்த் படேல்

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மாற்றங்கள் கொண்டுவருவதை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆதரிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறையின் உதவி செய்தி செயலாளர் வேதாந்த் படேல் தெரிவித்துள்ளார்.

    ஜனவரி மாதம் இதுபற்றிப் பேசிய டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க், இந்தியாவை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) நிரந்தர உறுப்பினராக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரித்தார்.

    இந்த கோரிக்கைக்கு வேதாந்த் படேல் பதிலளித்துள்ளார்.

    வேதாந்த் படேல், “அதிபர் இதைப்பற்றிப் பேசியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் சீர்திருத்தத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். இப்போது இதைப்பற்றிச் சொல்வதற்கு அதிகம் இல்லை. ஆனால் சீர்திருத்தத்தின் அவசியத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம்,” என்றார்.

    அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருந்தாலும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினராகாதது அபத்தமானது என்று மஸ்க் கூறியிருந்தார்.

    இந்தியாவைத் தவிர, ஆப்பிரிக்காவிற்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடத்தை மஸ்க் கோரியிருந்தார்.

    சில நாட்களுக்கு முன்பு இதைப்பற்றி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்த மஸ்க், பிரதமர் நரேந்திர மோதியைச் சந்திக்க ஆவலாக உள்ளதாக தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும், இந்த சந்திப்பு எப்போது நடைபெறும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

  8. ரஷ்யாவின் இறைச்சி அரவை உத்தி: சொந்த வீரர்களையே கொத்துக் கொத்தாக பலி கொடுத்த கொடூரம் – பிபிசி ஆய்வில் உறுதி

    யுக்ரேன் போர்: 50,000 ரஷ்ய வீரர்கள் பலி, சாரிசாரியாக மரணக்குழியில் தள்ளும் ரஷ்யா – என்ன நடக்கிறது?

    யுக்ரேனில் ரஷ்ய ராணுவ வீரர்களின் இறப்பு எண்ணிக்கை இப்போது 50,000ஐ கடந்துவிட்டதை பிபிசி உறுதிப்படுத்தியுள்ளது. செப்டம்பர் 2022இல் ரஷ்யாவால் இதுவரை வழங்கப்பட்ட இறப்பு எண்ணிக்கைகளின் அதிகாரபூர்வ தரவுகளைவிட இது 8 மடங்கு அதிகம்.

    மேலும் படிக்க

    next

  9. டியூட்டி ஃப்ரீ உணவால் பிழைத்திருக்கிறோம்: துபாய் விமான நிலையங்களில் சிக்கிய பயணிகள்

    துபாய் வெள்ளம்

    Copyright: James Devine

    Image caption: கேம்பிரிட்ஜ் நகரைச் சேர்ந்த ஜேம்ஸ் மற்றும் எலிசபெத் டெவைன் தம்பதியினர்

    துபாயின் முக்கிய விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகள், ‘உணவு வேண்டி தவிப்பதாகவும்’ குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்வதாகவும் கூறுகின்றனர்.

    துபாய் விமான நிலையத்திலிருந்து பிபிசி-யிடம் பேசிய பயணிகள், துபாயின் இரண்டு பெரிய சர்வதேச விமான நிலையங்களில் அவர்கள் மணிக்கணக்கில் காத்திருப்பதாகவும், அவர்களுக்கு மிகக்குறைந்த அள்வே தகவல்களும் உதவியும் வழங்கப்படுவதாகக் கூறுகிறார்கள்.

    புதன்கிழமை (ஏப்ரல் 17) துபாய் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் `மற்றும் அக்கிருந்து புறப்படும் சுமார் 290 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கேம்பிரிட்ஜ் நகரைச் சேர்ந்த ஜேம்ஸ் மற்றும் எலிசபெத் டெவைன் தம்பதியினர், சிட்னியில் ஒரு திருமணத்திற்குச் சென்று திரும்பியபோது, விமானம் திசைதிருப்பப்பட்டதால், அவர்களது ஆறு மாத மகனுடன் துபாய் மத்திய விமான நிலையத்தில் சிக்கியிருக்கின்றனர்.

    அவர்கள் ‘டியூட்டி ஃப்ரீ’ உணவை உண்டு வாழ்வதாகவும், தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகவும் கூறுகிறார்கள்.

    கைக்குழந்தைகளுக்கு எந்த உணவும் வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

    அவர்கள் இருக்கும் விமான நிலையத்தில் பல நூறு பேர் சிக்கியிருப்பதாகவும் தெரிவித்தனர்.

    துபாய் சர்வதேச விமான நிலையத்தில் சிக்கியிருப்பவர்கள் தரும் தகவலின்படி பயணிகள் கூச்சலிட்டபடியும், பிரச்னை செய்தபடியும் இருக்கின்றனர். மக்கள் காத்திருப்பு அறைகளில் படுத்து உறங்குகின்றனர். தரையெங்கும் உனவுப் பொட்டலங்கள் சிதறிக்கிடக்கின்றன.

  10. பரோட்டா அதிகமாகச் சாப்பிட்டால் என்ன ஆகும்? உண்மையும் தவறான நம்பிக்கைகளும்

    தினமும் பரோட்டா சாப்பிடலாமா

    நீண்டகாலமாக மக்கள் மனதில் பதிந்துள்ள ஒரு விஷயம் மைதா உடலுக்கு கெடுதல் என்பது தான். அது உண்மையா? மைதாவின் மூலப்பொருள் என்ன? கோதுமை, மைதா, ரவை எல்லாம் ஒன்று தானா? யாரெல்லாம் மைதா உணவுகளை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்?

    மேலும் படிக்க

    next

  11. வெப்ப அலை: கர்ப்பிணிகள், குழந்தைகள், நீரிழிவு நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்?

    வெப்ப அலை

    தமிழ்நாட்டில் இப்போதே பல மாவட்டங்களில் வெப்ப அலை வீசுகிறது. தகிக்கும் இந்த வெப்பத்தில் இருந்து கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள், நீரிழிவு நோயாளிகள் ஆகியோர் தங்களை தற்காத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?

    மேலும் படிக்க

    next

  12. லண்டன் பள்ளியில் தொழுகைக்கு தடை – மாணவரின் முறையீடு நீதிமன்றத்தில் நிராகரிப்பு

    லண்டன் பள்ளியில் தொழுகை நடத்த தடை – மாணவரின் முறையீடு நீதிமன்றத்தில் நிராகரிப்பு

    பள்ளியில் தொழுகை நடத்த தடை

    Copyright: CABINET OFFIC

    Image caption: கேத்தரின் பீர்பால் சிங், தலைமை ஆசிரியை

    லண்டன் பள்ளி ஒன்றில் பயிலும் இஸ்லாமிய மாணவர், பள்ளியில் தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக செய்த மேல்முறையீட்டை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

    வெம்ப்லே பகுதியில் உள்ள மைக்கேலா பள்ளி மாணவர் ஒருவர், தொழுகை செய்ய தடை விதிப்பது பாரபட்சமானது என்று கூறி உயர் நீதிமன்றத்தை அணுகினார்.

    பள்ளியில் தொழுகை செய்ய அனுமதிப்பது மாணவர்கள் மத்தியில் மதவேறுப்பாட்டை ஏற்படுத்தும் என்று பள்ளி சார்பில் உயர் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

    இந்த வழக்கில் நீதிபதி தாமஸ் லிண்டன் தனது 83 பக்க தீர்ப்பில், “வழக்குத் தொடுத்த மாணவர், பள்ளியில் சேரும்போதே, ​​தனது மத சம்பந்தமான அடையாளங்களை வெளிப்படுத்த மாட்டேன் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்.” என குறிப்பிட்டுள்ளார்.

    ஃப்ரீ பள்ளியின் நிறுவனரும் தலைமை ஆசிரியருமான கேத்தரின் பீர்பால் சிங், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பேசுகையில், “இது அனைத்து பள்ளிகளுக்கும் கிடைத்த வெற்றி’’ என்று தெரிவித்துள்ளார்.

    தொழுகை செய்ய தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடுத்து, மேல்முறையீடு செய்து அதில் தோல்வியுற்றதை தொடர்ந்து, பள்ளியிலேயே தங்கி, GCSE தேர்வுகளில் கவனம் செலுத்தி வருவதாக அந்த மாணவர் கூறியுள்ளார்.

    “நான் தோல்வியுற்றேன்” என்று குறிப்பிட்ட மாணவர், தனக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ததன் மூலம், “நான் செய்தது சரி என்றே நினைக்கிறேன். நான் மேற்கொண்ட முயற்சியின் வாயிலாக எனக்கும் என் மதத்திற்கும் உண்மையாக இருந்தேன்.’’ என்றார்.

  13. தமிழ்நாட்டில் தொகுதிகளை வெல்லும் அளவுக்கு பாஜக வலுப்பெற்றுள்ளதா?

    தமிழ்நாட்டில் பாஜகவின் திட்டம் என்ன?

    தமிழ்நாட்டில் முதன் முறையாக தனது தலைமையில் வலுவான கூட்டணி அமைத்து திமுக, அதிமுக-வுக்கு சவால் கொடுக்கிறது பாஜக. தமிழ்நாட்டில் பா.ஜ.க-வின் திட்டம் என்ன? தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவை விஞ்சி தொகுதிகளை வெல்லும் அளவுக்கு பாஜக வலுவடைந்திருக்கிறதா?

    மேலும் படிக்க

    next

  14. இரான் சிறைபிடித்த கப்பலில் உள்ள 4 தமிழர்கள் யார்? தற்போதைய நிலை என்ன?

    எம்.எஸ்.சி ஏரிஸ்

    அரபிக் கடலில் இரான் சிறைபிடித்துள்ள கப்பலில் உள்ள 17 இந்தியர்களில் 4 பேர் தமிழர்கள். அவர்கள் நால்வரும் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? அவர்களின் தற்போதைய நிலை என்ன?

    மேலும் படிக்க

    next

  15. இரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கத் திட்டமிடும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம்

    இஸ்ரேல் மீது இரானின் தாக்குதல்

    Copyright: Reuters

    Image caption: இரான் ஏவிய ஏவுகணையின் எச்சம் என்று இஸ்ரேல் காட்சிப்படுத்திய பொருள்

    கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) இரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இரான் மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிக்கப் போவதாக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் தெரிவித்துள்ளன.

    அமெரிக்காவின் கருவூலச் செயலாளர் ஜேனட் யெல்லன், ‘வரும் நாட்களில்’ நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். அதே நேரத்தில் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல், அந்த அமைப்பும் இதே நோக்கில் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.இரானின் ஏவுகணைத் திட்டத்திற்குத் தடைவிதிக்குமாறு இஸ்ரேல் தனது நட்பு நாடுகளிடம் வலியுறுத்தியுள்ளது. ஏற்கனவே இத்திட்டத்தின் மீது ஐக்கிய நாடுகளின் தடை இருந்தது. அது கடந்த வருடம் அக்டோபரில் காலாவதியானது. இரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு பெரிய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அந்த ஒப்பந்தம் இருந்தது.

    இருப்பினும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் இரான் மீது தங்கள் பொருளாதாரத் தடைகளைத் தக்கவைத்து, மேலும் முதிய தடைகளைச் சேர்த்தன.

    இரானின் சமீபத்திய தாக்குதலுக்குக் கண்டிப்பாக பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் ராணுவத்தின் தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி திங்களன்று (ஏப்ரல் 15) கூறினார்.

    இரானின் 300 ட்ரோன்கள், ஏவுகணைகளை இஸ்ரேலுடன் அமெரிக்கா, பிரிட்டன் இணைந்து வழியிலேயே தாக்கி அழித்தது எப்படி? முழு தகவல்கள் இங்கே.

  16. யுபிஎஸ்சி நேர்காணலுக்கு முன் புற்றுநோயால் இறந்த தாய், இரண்டாம் இடம் பிடித்த மகன்

    யுபிஎஸ்சி

    Copyright: X/@DRJITENDRASINGH

    Image caption: ஒடிஷாவைச் சேர்ந்த அனிமேஷ் பிரதான்

    யுபிஎஸ்சி குடிமைப் பணிகள் தேர்வு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.இம்முறை, ஒடிஷாவைச் சேர்ந்த 24 வயது போட்டியாளரான அனிமேஷ் பிரதான் தேசிய அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். அவர் தனது முதல் முயற்சியிலேயே இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.அவர் குறித்து செய்தி வெளியொட்டுள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், அனிமேஷ் பிரதான் யுபிஎஸ்சி நேர்காணலுக்குத் தயாராகிக்கொண்டிருந்தபோது, அவரது தாயார் புற்றுநோயால் இறந்தார் என்று குறிப்பிட்டிருக்கிறது.தனது பொறுமை மற்றும் உறுதிப்பாடு கடினமான சூழ்நிலைகளைச் சமாளிக்க தனக்கு உதவியதாக அனிமேஷ் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் கூறினார்.“நான் தேர்வுக்குத் தயாராவதற்கு என் தாயார் எனக்கு உறுதுணையாக இருந்தார். நான் அவருக்காகத்தான் குடிமைப் பணிகள் தேர்வுக்குப் படிக்க விரும்பினேன்,” என்றார்.இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் அனிமேஷ் மேலும் கூறுகையில், “அவர் இன்னும் சில நாட்கள் மட்டுமே உயிருடன் இருப்பார் என்று எனக்குத் தெரியும். அவர் தாந்து கடைசி நாட்களில் புற்றுநோயுடன் போராடினார். என் அம்மா என்னைப் பற்றி பெருமைப்பட வேண்டும் என்பதற்காக நான் கூடிய விரைவில் யுபிஎஸ்சி-யில் தேர்ச்சி பெற விரும்பினேன்,” என்றார்.அனிமேஷ் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அதாவது என்ஐடி ரூர்கேலாவில் பி.டெக் படித்துள்ளார்.

  17. காலநிலை நெருக்கடி: அரசியல் கட்சிகளிடம் எண்ணூர் மக்கள் எதிர்பார்ப்பது என்ன?

    தேர்தலைப் புறக்கணிக்கும் மனநிலையில் எண்ணூர் மக்கள்

    இன்னும் இரண்டு நாட்களில் தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில் சென்னையின் எண்ணூர் பகுதியைச் சேர்ந்த மக்கள் காலநிலை நெருக்கடி குறித்தும், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளிடம் தாங்கள் எதிர்பார்ப்பது என்ன என்பது குறித்தும் தங்களது கருத்துக்களை பிபிசி தமிழுடன் பகிர்ந்துகொண்டனர்.

    மேலும் படிக்க

    next

  18. சத்தீஸ்கர்: 29 மாவோயிஸ்ட்கள் என்கவுன்டரில் கொல்லப்பட்டது எப்படி? – காவல்துறை கூறுவது என்ன?

    சத்தீஸ்கர் மாவோயிஸ்ட்கள் என்கவுன்டர்

    சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் இயங்கிவரும் கான்கேர் மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் 29 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக காவல்துறை கூறியுள்ளது.

    மேலும் படிக்க

    next

  19. தேர்தல் பத்திரத்தின் மூலம் நன்கொடை கொடுத்தவர்கள் பெயரை பாஜக ஏன் வெளியிடவில்லை? – ராகுல் காந்தி கேள்வி

    தேர்தல் பத்திரம், பாஜக, ராகுல் காந்தி

    Copyright: ANI

    தேர்தல் பத்திரங்கள் மூலம் வெளிப்படைத்தன்மையை கொண்டு வர அரசு திட்டமிட்டிருந்தால், நன்கொடை அளித்தவர்களின் பெயர்களை பாஜக ஏன் வெளியிடவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வியெழுப்பினார்.

    இன்று (புதன், ஏப்ரல் 17) உத்தரபிரதேச மாநிலம் காஸியாபாத்தில் ‘இந்தியா’ கூட்டணி தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

    அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “இந்தத் தேர்தல் சித்தாந்தத்தின் தேர்தல். பாஜக அரசியல் சாசனத்தை அழிக்க நினைக்கிறது, இந்தியா கூட்டணி அதைப் பாதுகாக்க முயல்கிறது,” என்றார்.

    “பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் அனைவருக்குமான நலன்கள் ஆகியவை இந்தத் தேர்தலின் முக்கியப் பிரச்னைகள். சில சமயங்களில் பிரதமர் மோதி கடலுக்கு அடியில் செல்கிறார், சில சமயங்களில் விமானத்தில் விண்ணுக்குச் செல்கிறார், ஆனால் அவரோ பாஜக-வோ இந்தப் பிரச்னைகளைப் பற்றி பேசுவதில்லை,” என்றார்.“சமீபத்தில், பிரதமர் மோடி ஏ.என்.ஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டி முன்னரே எழுதி தயாரிக்கப்பட்டது, ஆனாலும் தோல்வியடைந்தது. வெளிப்படைத்தன்மைக்காக தேர்தல் பத்திரம் கொண்டு வரப்பட்டதாக பிரதமர் மோதி கூறுகிறார். இது உண்மையென்றால் பணம் கொடுத்தவர்களின் பெயர்களை ஏன் மறைக்க விரும்புகிறீர்கள்?” என்று அவர் கேள்வியெழுப்பினார்.

    “ஒரு நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கிடைத்தால், அதற்கான பணத்தை பாஜக பெறுகிறது,” என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். “ஒரு நிறுவனம் மீது அமலாக்கத் துறை, சிபிஐ நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதற்கு 10 அல்லது 15 நாட்களுக்குப் பிறகு அந்நிறுவனங்களிடமிருந்து பாஜக நன்கொடை பெறுகிறது,” என்றார் ராகுல் காந்தி.

    “இதுவே தெருவில் நடந்தால் அது ‘பணம் பறித்தல்’ என்று அழைக்கப்படுகிறது. பிரதமர் மோதி ஊழலின் தலைவர்,” என்றார்.

    அகிலேஷ் யாதவ், ‘பிடிஏ’ (அதாவது பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் சிறுபான்மையின மக்கள்) பாஜகவை தோற்கடிக்கப் போகிறார்கள்‘ என்று கூறினார்.

  20. கோவை மக்களை சாதி ரீதியாக அணி திரட்டுவது சாத்தியமா? – பிபிசி கள ஆய்வு

    கோயம்புத்தூர்

    கோயம்புத்தூரில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க. என கடுமையான மும்முனைப் போட்டி நிலவுகிறது. அரசியல் கட்சிகளின் பரப்புரைகளைத் தாண்டி இந்தத் தொகுதியில் ஆதிக்கம் செலுத்தும் வேறு விஷயங்கள் என்னென்ன?

    மேலும் படிக்க

    next