இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 9 பாகிஸ்தானியர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை !

by admin

இலங்கையில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 9 பாகிஸ்தான் பிரஜைகளுக்கும் தலா 10 வருடக் கடூழிய சிறைத்தண்டனை விதிக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதி பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 614 கிராம் 36 மில்லி கிராம் ஐஸ் மற்றும் 614 கிராம் 34 மில்லி கிராம் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து சந்தேக நபர்கள் கொழும்பு உயர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள நிலையில் கொழும்பு உயர் நீதிமன்றம் அவர்களுக்கு 10 வருடக் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

பின்னர், குற்றவாளிகளை சிறைத்தண்டனை அனுபவிப்பதற்காகப் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்