2024 நவம்பர் முதல் 2025 ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற மத மற்றும் நம்பிக்கை சுதந்திர மீறல் சம்பவங்கள் தொடர்பான புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளது.
இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ (எவாஞ்சலிக்கல்) கூட்டிணைவின் (NCEASL) ஆய்வறிக்கையில் இந்தத் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஆய்வறிக்கையில் உள்ள விபரங்கள் பின்வருமாறு:
மத, நம்பிக்கை சுதந்திர மீறல் – 29 சம்பவங்கள்
பிரிவினை – 19 சம்பவங்கள்
அச்சுறுத்தல்/மிரட்டல் – 15 சம்பவங்கள்
பொதுச்சொத்து சேதம் – 5 சம்பவங்கள்
உடலியல் ரீதியான வன்முறை – 5 சம்பவங்கள்
கிறிஸ்தவர்களும் இந்துக்களும் அதிகம் இலக்குவைப்பு
கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குல்கள் – 58
இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்கள் – 22
சமூகவலைத்தளங்களில் முஸ்லிம்கள் அதிகம் இலக்குவைப்பு
முஸ்லிம்களுக்கு எதிரான சமூகவலைத்தள மீறல் சம்பவங்கள் – 15
பொலிஸாரின் பங்களிப்புடனான மீறல் சம்பவங்கள் – 36
அதிக எண்ணிக்கையான மீறல்கள் பதிவான மாவட்டம் – கம்பஹா (15)