← முகப்பு தலையங்கம்

ஹோர்முஸ் நீரிணை அருகே அமெரிக்க கடற்படை ஈரானிய சரக்குக் கப்பலை கைப்பற்றியது. எச்சரிக்கைகளை புறக்கணித்ததால் நடவட

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 தலையங்கம் 26 பார்வைகள்
ஹோர்முஸ் நீரிணை அருகே அமெரிக்க கடற்படை ஈரானிய சரக்குக் கப்பலை கைப்பற்றியது. எச்சரிக்கைகளை புறக்கணித்ததால் நடவட

ஹோர்முஸ் நீரிணை அருகே அமெரிக்க கடற்படை ஈரானிய சரக்குக் கப்பலை கைப்பற்றியது. எச்சரிக்கைகளை புறக்கணித்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை அருகே கடற்படை கட்டுப்பாடுகளை மீறிச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் ஈரான் நாட்டைச் சேர்ந்த சரக்குக் கப்பலை அமெரிக்கா கடற்படை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘தூஸ்கா’ என அழைக்கப்படும் அந்தக் கப்பல் ஓமன் வளைகுடா பகுதியில் பயணித்தபோது பலமுறை எச்சரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், அந்த எச்சரிக்கைகளை புறக்கணித்து கப்பல் தொடர்ந்து முன்னேறியதால், அமெரிக்க கடற்படை நடவடிக்கை எடுத்து அதனை தடுத்து வைத்து கைப்பற்றியதாக கூறப்படுகிறது. தற்போது அந்தக் கப்பலில் உள்ள சரக்குகள் குறித்து விரிவான சோதனை நடைபெற்று வருகிறது.

மேலும், அந்தக் கப்பல் ஈரானின் துறைமுகத்தை நோக்கி பயணித்ததாகவும், அங்கு செல்ல வேண்டாம் என சுமார் 6 மணி நேரம் முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரான் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்
தலையங்கம்
30 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூன் 8, 2026 அன்று சுக்கிரனும் சந்திரனும் இணைந்து உருவாக்கும் நவபஞ்சம
06 Jun 2026
தலையங்கம்
தமிழகத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா (மாநிலங்களவை) இடைத்தேர்தலில், ஆளும் தவெக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்
40 நிமிடங்கள் முன்னர்
தலையங்கம்
பிரிட்டனின் கில்ட்ஃபோர்ட் (Guildford) பகுதியில் உள்ள சர்ரே பல்கலைக்கழகத்தின் (University of Surrey) வளாகத்தில்
4 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான ஆந்த்ரோபிக் (Anthropic), அதிநவீன ஏஐ
5 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
ஆஸ்திரியா மற்றும் இத்தாலியின் எல்லைப் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் (Alps) பனிமலையில், கடந்த 1991 ஆம்
6 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
யாழ்ப்பாண மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசியல் ஆதாயத்த
10 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net