← முகப்பு செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் முதன்மை செயற்பாட்டு அதிகாரி கபில சந்திரசேனவின் மறைவு நாட்டுக்கு ஒரு சிறந்த

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 50 பார்வைகள்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் முதன்மை செயற்பாட்டு அதிகாரி கபில சந்திரசேனவின் மறைவு நாட்டுக்கு ஒரு சிறந்த
கபில சந்திரசேனவின் மரணம் குறித்து முறையான விசாரணை அவசியம் : பத்தரமுல்ல சீலரத்ன தேரர்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் முதன்மை செயற்பாட்டு அதிகாரி கபில சந்திரசேனவின் மறைவு நாட்டுக்கு ஒரு சிறந்த ஆளுமையின் இழப்பாகும் அவரது மரணம் தொடர்பில் அரசாங்கம் முறையான விசாரணைகளை முன்னெடுத்து உண்மையை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என பத்தரமுல்ல சீலரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.

கபில சந்திரசேனவின் இறுதிக்கிரியை நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கபில சந்திரசேனவின் மறைவு குறித்து நாம் மிகுந்த கவலையடைகிறோம். அதேவேளை, அவரது மரணம் தொடர்பில் அரசாங்கம் நேரடியாகத் தலையிட்டு, குறைந்தபட்சம் முறையான விசாரணையையாவது முன்னெடுத்து, உண்மையில் அங்கு என்ன நடந்தது என்பதை நாட்டுக்குத் தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகும்.

உண்மையில் நாம் இந்த அரசாங்கத்தைக் குறைகூறுவதற்காகவோ அல்லது குற்றஞ்சாட்டுவதற்காகவோ இதனைத் தெரிவிக்கவில்லை. இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தி கொள்ளும் வகையில் சிலர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அத்தகைய கூற்றுக்கள் குறித்து நான் வருத்தமடைகிறேன். உயர் மட்டத்திலுள்ள ஒரு நபர் சிறைச்சாலைக்கு அல்லது விளக்கமறியலுக்கு உட்படுத்தப்படும் போது, அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

எனினும், கபில சந்திரசேனவின் விடயத்தில் அவருக்கு உரிய பாதுகாப்புச் சரியான முறையில் வழங்கப்படவில்லை என்பதே எமது கருத்தாகும். இதனை அரசாங்கத்தின் ஒரு பலவீனமாகவே நாம் கருதுகின்றோம். எதிர்காலத்தில் இவ்வாறான முக்கியத்துவம் வாய்ந்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் போதோ அல்லது அவர்கள் சிறையில் அடைக்கப்படும் போதோ, அவர்களின் உயிர் பாதுகாப்பை தற்போதைய அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

கபில சந்திரசேன போன்ற ஒரு திறமையான மற்றும் சிரேஷ்டமான ஒருவரை எமது நாடு இன்று இழந்துள்ளது. அவர் நாட்டின் அபிவிருத்திக்குத் தனது அறிவாற்றலால் பங்களிப்பு வழங்கியவர். எனவே, இந்தச் சம்பவத்தைச் சாதகமாக்கிக் கொண்டு அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்க வேண்டாம் என அனைவரிடமும் கேட்டுக்கொள்வதுடன், எமது நாட்டின் மிகச்சிறந்த ஒரு ஆளுமையை இழந்தமைக்காக மீண்டும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net