← முகப்பு செய்திகள்

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், செல்ல அய்யாவு எழுதி, இயக்கி கடந்த 2022ஆம் ஆண்டு

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 14 பார்வைகள்
விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், செல்ல அய்யாவு எழுதி, இயக்கி கடந்த 2022ஆம் ஆண்டு
‘கட்டா குஸ்தி 2’ படம் ஜூலை 3ம் தேதி வெளியீடு

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், செல்ல அய்யாவு எழுதி, இயக்கி கடந்த 2022ஆம் ஆண்டு வெளியானப் படம் கட்டா குஸ்தி. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல்ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இப்படத்திலும் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமியே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதனையும் செல்ல அய்யாவுவே இயக்கியுள்ளார். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பார்வை பதாகை வெளியாகி உள்ளது. மேலும் படம் ஜூலை 3ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net