← முகப்பு பதிவு

வலி. வடக்கில் உள்ள மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் குறிப்பிட்ட கால எல்லையை எம்மால் கூற

🕐 3 நாள்கள் முன்னர் 📂 பதிவு 18 பார்வைகள்
வலி. வடக்கில் உள்ள மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் குறிப்பிட்ட கால எல்லையை எம்மால் கூற
வலி.வடக்கில் காணிகளை விடுவிப்போம் – ஆனால் கால எல்லையை கூற முடியாது

வலி. வடக்கில் உள்ள மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் குறிப்பிட்ட கால எல்லையை எம்மால் கூற முடியாது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் நேரில் வந்து நிலைமைகளை ஆராய்ந்து சென்றுள்ளார். அது தொடர்பில் நாடாளுமன்றில் நடைபெறவுள்ள பாதுகாப்பு குழு கூட்டத்தில் ஆராயப்பட்டு , உடனடியாக விடுவிக்க கூடிய காணிகளை விடுவிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார்

யாழில். இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

வடக்கில் உள்ள இராணுவ கட்டமைப்பை எவ்வாறு மறுசீரமைத்து , மக்களின் காணிகளை மக்களிடம் கையளிக்க வேண்டும் என்பது தொடர்பில் ஆராய்வதற்காகவே பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஜனாதிபதியின் பணிப்புக்கு அமைய யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தார்

இராணுவ முகாம்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆராய்வதற்கே வடமாகாண ஆளுநர், அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கிய உயர் மட்ட குழு மக்களின் காணிகளில் அமைந்துள்ள இராணுவ முகாம் தொடர்பில் ஆராய்ந்து அவை தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்

அதில் முக்கியமாக விமான நிலைய விஸ்தரிப்புக்கு தேவையான காணிகள் தொடர்பில் ஆராயப்பட்டது. அதன் போது , விமான நிலையத்திற்கு என முன்னரே பெறப்பட்ட காணிகளுக்கான நஷ்ட ஈடுகள் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட வில்லை என சுட்டிக்காட்டப்பட்டது. அதனை வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம். அத்துடன் விமான நிலைய விஸ்தரிப்புக்காக எத்தனை ஏக்கர் காணி தேவை என்பது தொடர்பில் தகவல்களை சேகரிக்க ஆரம்பித்துள்ளோம்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அடுத்த விமான நிலையமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை அமைக்கவே எமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளோம். அதனால் அவற்றுக்கு தேவையான காணிகளை சுவீகரித்துக்கொண்டு , அக்காணிகளுக்கான இழப்பீடுகளை காணி உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதுடன் , ஏனைய காணிகளை மக்களிடமே மீள கையளிப்போம்.

துரித நடவடிக்கையாக வலி. வடக்கில் சில இடங்களில் இராணுவ முகாம்கள் இல்லாது , இராணுவம் வெளியேறிய பின்னரும் , அவை இராணுவ கட்டுப்பாட்டில் உள்ளன அவற்றை விடுவிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன

அத்துடன் வழிபாட்டு தளங்கள் , பாடசாலைகள் என்பவற்றையும் அடையாளப்படுத்தி அவற்றையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காணி விடுவிப்பு தொடர்பில் எம்மால் கால எல்லையை கூற முடியாது. இதற்கான பொறிமுறைகள் உள்ளன. தற்போது பாதுகாப்பு பிரதி அமைச்சர் நேரில் வந்து ஆராய்ந்து சென்றுள்ளார். அதன் பிரகாரம் நாடாளுமன்ற பாதுகாப்பு குழு கூட்டத்தில் இவ்விடயங்கள் ஆராயப்பட்டு , உடனடியாக விடுவிக்க கூடிய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் , மற்றைய காணிகள் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்படும். அதனால் கால எல்லையை எம்மால் கூற முடியாது என மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
5 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
6 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
6 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
7 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
8 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
9 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்
2
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 04 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
3
ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள புகழ்ப
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
4
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள நில
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
5
அமெரிக்காவின் போர்ட்டோ ரிகோ நாட்டில் இருந்து சிகாகோ நோக்கிச் சென்
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
6
சீனாவின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும், தங்களின் கடல்சார் இறையாண
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
7
IPL 2026 Retained Stars Who Struggled To Deliver Consistently ft
செய்திகள் · 3 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net