← முகப்பு செய்திகள்

வட மாகாண மாணவர்களின் கல்வியை திட்டமிட்ட முறையில் அழிப்பதற்கான செயற்பாடுகளுக்கு வட மாகாண ஆளுநரும் உடந்தையாக

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 22 பார்வைகள்
வட மாகாண மாணவர்களின் கல்வியை திட்டமிட்ட முறையில் அழிப்பதற்கான செயற்பாடுகளுக்கு வட மாகாண ஆளுநரும் உடந்தையாக
வடக்கில் ஊழல் நிறைந்த அதிகாரிகளால் முறையற்ற ஆசிரிய இடமாற்றம் இடம்பெறுவதை ஆட்சேபித்து ஆளுநர் அலுவலகம் முன் கொட்டும் மழையில் ஆசிரியர்கள் போராட்டம்!

வட மாகாண மாணவர்களின் கல்வியை திட்டமிட்ட முறையில் அழிப்பதற்கான செயற்பாடுகளுக்கு வட மாகாண ஆளுநரும் உடந்தையாக இருக்கிறாரா எனவும் கேள்வி

வடக்கு மாகாணத்தில் உள்ள ஊழல் நிறைந்த அதிகாரிகளால் இடமாற்றச் சபையை மீறி ஆசிரிய இடமாற்றம் வழங்கப்பட்டமையை கண்டித்து 15ம் திகதி அன்று வெள்ளிக்கிழமை கொட்டும் மழையிலும் ஆளுநர் அலுவலகம் முன் இலங்கை ஆசிரியர் சங்கத்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் தீபன் திலீசன் கருத்து தெரிவிக்கையில்,

வடமாக கல்வியை திட்டமிட்டு அழிக்கும் முயற்சியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இணைந்து ஊழல் கல்வி அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.

இடமாற்றச் சபையை மீறி தாங்கள் கட்சிகளுக்கு சார்பானவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு சார்பானவர்களை யாழ்ப்பாணத்திலே தொடர்ச்சியாக தங்க வைத்துவிட்டு கஷ்டப் பிரதேசங்களில் ஆசிரிய சேவையை செய்த ஆசிரியர்களை மீண்டும் வெளிமாவட்டம் அனுப்புகிறார்கள்.

யாழ். தீவகம் மற்றும் மருதங்கேணிப் பிரதேசங்களில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சேவை ஆற்றிய ஆசிரியர்களை தமக்கு இயைவானவர்களை யாழ்ப்பாணத்தில் தக்க வைத்துக் கொள்வதற்காக திட்டமிட்ட முறையில் சேவையின் தேவை கருதிய இடமாற்றம் என்ற போர்வையில் ஆசிரியர்கள் பழிவாங்கப்படுகின்றனர்.

வடக்கு கல்வியில் ஊழல் புரிந்த பல அதிகாரிகள் தமது பதவிகளை தக்க வைத்துக் கொள்வதற்கும் உயர் பதவிகளை அடைவதற்காகவும் தேசிய மக்கள் சக்திக்கு பின்னால் இந்த முறைகேடான இடமாற்றத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்த இடமாற்றத்தில் பல குறைபாடுகள் இருக்கிறது என வட மாகாண ஆளுநருக்கு எழுத்து மூலம் ஆசிரியர் சங்கம் தெரியப்படுத்தியும் அவரும் தேசிய மக்கள் சக்தியின் நிகழ்ச்சி நிரலை மேற்கொள்வதற்காக இந்த இடம் மாற்றத்தை மேற்கொள்வதற்கு உறுதுணையாக இருக்கிறார்.

யாழ்ப்பாண. மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தொடர்பான கருத்து எழுந்த போது முண்டியடித்துக் கொண்டு இந்த இடம் மாற்றம் செய்தே ஆக வேண்டுமென ஆளுநர் கூறியமை எமக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. வெளிமாவட்டங்களுக்கு ஆசிரிய பங்கீடு அவசியம் என்பதை ஆசிரியர் சங்கம் எப்போதும் கூறி வருகிறது அதற்கு எதிராக செயல்பட்டதும் இலலை.

ஆனால் வெளி மாவட்டமே செல்லாத பல ஆசிரியர்கள் அரசியல் கட்சியின் செல்வாக்குடனும் உயர் அதிகாரிகளின் செல்வாக்குடனும் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் தங்கி இருக்க சேவையின் தேவை கருதிய இடமாற்றம் என்ற போர்வையில் முறையற்ற இடமாற்றங்களை வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

வடக்கு கல்வியை திட்டமிட்ட முறையில் அழிப்பதற்கான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு வட மாகாண ஆளுநரும் உடந்தையாக இருக்கிறார். அதற்கான பல ஆதாரங்களை நாங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தோம். யாழ்ப்பாணத்தில் உயர் தர விஞ்ஞான பிரிவில் ஆங்கில மொழி மூலமான ஆசிரியரை பாடமே இல்லாத வலயம் ஒன்றுக்கு இடமாற்றம் வழங்கி இருக்கிறார்கள். இதன் பின்னணி என்ன யாழ்ப்பாணத்தின் உயர்தர விஞ்ஞான பிரிவை திட்டமிட்ட முறையில் அழிப்பதற்கான நிகழ்ச்சித் திட்டமே இந்த இடமாற்றத்தின் பின்னணி.
ஆகவே கொட்டும் மழையில் இந்த ஆசிரியர்களின் போராட்டம் ஆரம்பித்து வைக்கப்படு கின்ற நிலையில் தொடர்ச்சியாக எமது கோரிக்கைகள் உரிய முறையில் பரிசீலிக்கப்படும் வரை தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொள்வோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

(பிற்குறிப்பு:- இங்குள்ள படங்களில் போராட்டம் செய்யும் ஆசிரியப் பெருந்தகைகள் காணப்பெறுகின்றனர். மாணவர்களுக்கும் அவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் வழிகாட்டிகளாக இருக்க வேண்டிய ஆசிரியர்கள் போராட்டம் செய்வதற்குரிய ஒழுங்கு மற்றும் வீதி ஓரமாக வரிசையாய் நிற்காமல் பொது வீதியில் கதைத்த வண்ண்ம் காணப்டுகின்றார்கள். அனைவரும் ஒன்று சேர்ந்து ‘போராட்டத்திறகுரிய கோசங்களை எழுப்பாமல் ஒவ்வொருவரும் தங்கள் சொந்தக்கதைகளை பேசிக்கொள்வது போன்று நிற்கின்றார்கள். இவர்களது தொழிற்சங்கம் இந்த விடயத்தைக் கவனிக்க வேண்டும். போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுக்கு தங்கள் நோக்கத்தைக் கற்பிக்க வேண்டும்- கனடா உதயன் ஆசிரிய பீடம்

மேலும் செய்திகள்
முக்கிய செய்திகள்
1
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 07 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
2
நடுவானில் 33,000 அடி உயரத்தில் விமான என்ஜின் வெடித்தும் பயணிகளை க
செய்திகள் · 26 நிமிடங்கள் முன்னர்
3
பிரிட்டனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கிய இளைஞரால் 18 வயது
தலையங்கம் · 59 நிமிடங்கள் முன்னர்
4
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி விடுத்த நேருக்கு நேர் பேச்சு
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
5
அமெரிக்காவின் மறைந்த தொழிலதிபரும், சிறுமிகளை பாலியல் கடத்தல் செய்
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
6
India T20 Squad- List of 5 cricketers not selected from T20 World
செய்திகள் · 2 மணி நேரம் முன்னர்
7
Rajat Patidar Omission In India's T20 Squad Sparks Debate- H
செய்திகள் · 2 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net