← முகப்பு செய்திகள்

வடக்கின் கல்வித்துறை நிர்வாகத்தில் தொடரும் ஒரு ‘சாபக்கேடு’! வடக்கு மாகாணத்தில் கல்வி நிர்வாக சேவை சுற்றறிக்கை

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 36 பார்வைகள்
வடக்கின் கல்வித்துறை நிர்வாகத்தில் தொடரும் ஒரு ‘சாபக்கேடு’! வடக்கு மாகாணத்தில் கல்வி நிர்வாக சேவை சுற்றறிக்கை
வட மாகாணத்தில் இடமாற்ற விதிகளுக்கு முரணாக 35 கல்வி அதிகாரிகள் இடமாற்றம் எதுவுமின்றி ‘குந்தியிருப்பு’!

வடக்கின் கல்வித்துறை நிர்வாகத்தில் தொடரும் ஒரு ‘சாபக்கேடு’!

வடக்கு மாகாணத்தில் கல்வி நிர்வாக சேவை சுற்றறிக்கை இடமாற்ற விதிகளுக்கு முரணாக இடமாற்றம் இன்றி 35 கல்வி அதிகாரிகள் சேவையில் இருக்கின்றமை தகவல் அறியும் சட்டமூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் சுற்றறிக்கை இலக்கம் 32/2022 2.1.2 இன் படி 12 வருடங்களுக்கு மேலாக ஒரு மாகாணத்தில் கல்வி நிர்வாக அதிகாரிகளாக இருப்பார்களுக்கு பணி இடமாற்றம் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்படுகிறது.

இவ்வாறு இருக்கையில் 19 வருடங்களாக 5 அதிகாரிகளும் 18 வருடங்களாக 3 அதிகாரிகளும் ஒட்டுமொத்தமாக 12 வருடங்களுக்கு மேல் 35 அதிகாரிகளும் வடக்கு மாகாணத்தில் தொடர்ந்து சேவையாற்றுகின்றனர்.

இவ்வாறு இடமாற்றம் இன்று ஒரு பகுதியினர் தொடர்ந்து வடக்கு மாகாணத்தில் தங்கி இருப்பதால் வெளி மாகாணங்களில் இருந்து சேவை காலத்தை பூர்த்தி செய்த கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் வடக்கு மாகாணத்துக்கு வர முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

அது மட்டும் அல்லாது அவர்கள் வகிக்கும் பதவிகளுக்கு கீழ் உள்ளவர்கள் பதவி உயர்வின் அடிப்படையில் உரிய பதவி நிலைகளை அடைவதில் கால தாமதங்கள் ஏற்படுகின்றது.

இவ்வாறான நிலையில் சுற்றறிக்கைகளை மீறி கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளாக தொடர்ச்சியாக வடக்கு மாகாணத்தில் தங்கு இருப்பதால் பழிவாங்கல்கள், நிர்வாக முறைகேடுகள் என்பன மேலோங்கி காணப்படும் அபாயங்களும் உள்ளன.

ஆகவே பொறுப்பு வாய்ந்தவர்கள் நிர்வாக சுற்றறிக்கைகளை உரிய முறையில் பின்பற்றி உரிய காலப் பகுதியில் இடமாற்றங்களை வழங்குவது ஆரோக்கியமான கல்விச் சூழலை உருவாக்கும்.

மேலும் செய்திகள்
முக்கிய செய்திகள்
1
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 07 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
2
நடுவானில் 33,000 அடி உயரத்தில் விமான என்ஜின் வெடித்தும் பயணிகளை க
செய்திகள் · 28 நிமிடங்கள் முன்னர்
3
பிரிட்டனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கிய இளைஞரால் 18 வயது
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
4
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி விடுத்த நேருக்கு நேர் பேச்சு
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
5
அமெரிக்காவின் மறைந்த தொழிலதிபரும், சிறுமிகளை பாலியல் கடத்தல் செய்
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
6
India T20 Squad- List of 5 cricketers not selected from T20 World
செய்திகள் · 2 மணி நேரம் முன்னர்
7
Rajat Patidar Omission In India's T20 Squad Sparks Debate- H
செய்திகள் · 2 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net