← முகப்பு செய்திகள்

லெபனான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், ஏற்கனவே அமலில்

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 28 பார்வைகள்
லெபனான் – இஸ்ரேல் போர் நிறுத்தம் மேலும் 45 நாட்களுக்கு நீட்டிப்பு – அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவிப்பு

லெபனான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், ஏற்கனவே அமலில் உள்ள போர் நிறுத்தம் மேலும் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மத்தியஸ்தப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த முக்கிய முடிவு எட்டப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி பிகாட் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இரு நாடுகளுக்கு இடையேயான எல்லையில் மேற்கொண்டு அமைதிப் பேச்சுவார்த்தை முன்னேற்றம் காண்பதற்கு ஏதுவாக, கடந்த ஏப்ரல் 16-ம் தேதி அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் மேலும் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது” என்று தெரிவித்தார். ஏற்கனவே நீட்டிக்கப்பட்டிருந்த போர் நிறுத்தம், வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் காலாவதியாகவிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நிரந்தர அரசியல் உடன்பாட்டை எட்டுவதை நோக்கமாகக் கொண்டு, அமெரிக்க வெளியுறவுத்துறை வரும் ஜூன் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளது. அதற்கு முன்னதாக, வருகிற 29-ம் தேதி இரு நாடுகளின் இராணுவ பிரதிநிதி குழுக்களை ஒன்றிணைக்க அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் திட்டமிட்டுள்ளது.

மேலும் செய்திகள்
முக்கிய செய்திகள்
1
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 07 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
2
நடுவானில் 33,000 அடி உயரத்தில் விமான என்ஜின் வெடித்தும் பயணிகளை க
செய்திகள் · 27 நிமிடங்கள் முன்னர்
3
பிரிட்டனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கிய இளைஞரால் 18 வயது
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
4
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி விடுத்த நேருக்கு நேர் பேச்சு
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
5
அமெரிக்காவின் மறைந்த தொழிலதிபரும், சிறுமிகளை பாலியல் கடத்தல் செய்
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
6
India T20 Squad- List of 5 cricketers not selected from T20 World
செய்திகள் · 2 மணி நேரம் முன்னர்
7
Rajat Patidar Omission In India's T20 Squad Sparks Debate- H
செய்திகள் · 2 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net