← முகப்பு செய்திகள்

ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பெத்தி’. இந்த படத்தினை இயக்குனர் புச்சி பாபு சனா

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 6 பார்வைகள்
ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பெத்தி’. இந்த படத்தினை இயக்குனர் புச்சி பாபு சனா
ஜெகபதி பாபு ‘பெத்தி’ படத்தின் பின்னணி குரல் பணியை நிறைவு செய்தார்

ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பெத்தி’. இந்த படத்தினை இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ளார். மேலும், கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் புகழ் திவ்யேந்து, ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விளையாட்டை மையப்படுத்தி அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் ஜூன் 4ம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை எதிர்பார்த்தி ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். இதற்கிடையில், இந்த படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் ஆகியவை வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தன. இந்த நிலையில், பெத்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ஜெகபதி பாபு சமீபத்தில் இந்த படத்திற்கான பின்னணி குரல் பணிகளை நிறைவு செய்துள்ளார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net