← முகப்பு பதிவு

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி அவர்களின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கும் எந்தவொரு தொடர்ப

🕐 2 நாள்கள் முன்னர் 📂 பதிவு 20 பார்வைகள்
யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி அவர்களின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கும் எந்தவொரு தொடர்ப
தொடர்பில்லை:ஆளுநர் அறிவிப்பு!

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி அவர்களின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது என வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.

சமூகத்தில் எழக்கூடிய தேவையற்ற ஊகங்களைத் தவிர்க்கும் பொருட்டும், உண்மை நிலைமையைப் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையிலுமே ஆளுநர் செயலகத்தால் பொது அறிவிப்பு வெளியிடப்படுகின்றதென வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

முன்னதாக யாழ் மேல்நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய அலெக்ஸ்ராஜா இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் வடக்கு ஆளுனரின் அரசியல் தலையீடு உள்ளதென தெரிவித்து யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத்தின் ஒரு பிரிவினர், ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பும் விவகாரத்தில் யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத்திற்குள் ஒருமித்த நிலைப்பாடு ஏற்படவில்லை. ஒரு பகுதி சட்டத்தரணிகளால் மாத்திரம் அந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஏனைய ஒரு பகுதி சட்டத்தரணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனையடுத்து குழப்பத்தினால் யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி பரமராஜா, யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்க தலைமை பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்..

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய அலெக்ஸ்ராஜா, கடமையிலிருந்து திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையேற்ற ஒரு மாதத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் சிலருக்கு எதிராக வடக்கு ஆளுனர் அமைத்த விசாரணைக்குழுவுக்கு எதிராக, யாழ் மேல் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

அவை தொடர்பில் வடக்கு ஆளுனர் அரச உயர்மட்டத்தில் முறையிட்டு, அரசியல் தலையீட்டை கோரியதாக தற்போது குற்றம்சாட்டப்படுகிறது.

இதனிடையே தொடர்புடைய வழக்கு மீள விசாரணைக்கு வந்த போது, உள்ளூராட்சி பிரதிநிதிகள் சார்பாக சட்டத்தரணிகள் நீதிமன்றத்தை பிழையாக வழிநடத்த முயன்றதாக தெரிவித்ததுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையிலேயே நீதிச்சேவைகள் ஆணைக்குழுவினால் யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜாவுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது. வடக்கு ஆளுனரின் மூலமான அரசியல் தலையீட்டினால், நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டு வந்திருந்தது.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
4 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
5 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
5 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
6 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
7 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
8 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள நில
தலையங்கம் · 31 நிமிடங்கள் முன்னர்
2
சீனாவின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும், தங்களின் கடல்சார் இறையாண
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
3
IPL 2026 Retained Stars Who Struggled To Deliver Consistently ft
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
4
Gajakesari Yoga in June 2026 bring luck and prosperity to these 4
இன்றைய ராசிபலன் · 2 மணி நேரம் முன்னர்
5
Suryakumar Yadav is all set to Removed As India T20 Captain; New
செய்திகள் · 2 மணி நேரம் முன்னர்
6
இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வரும் 5 முக்கிய கடத்தல்காரர்க
தமிழ் · 3 மணி நேரம் முன்னர்
7
உலகெங்கிலும் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பல்வேறு அளவிலான க
தமிழ் · 3 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net