← முகப்பு பதிவு

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் இரு வீடுகளில் ஒரு கோடியே 15 இலட்ச ரூபாய் பணம் மற்றும்

🕐 3 நாள்கள் முன்னர் 📂 பதிவு 38 பார்வைகள்
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் இரு வீடுகளில் ஒரு கோடியே 15 இலட்ச ரூபாய் பணம் மற்றும்
வடமராட்சியில் சீட்டு முதலாளியின் வீட்டில் ஒரு கோடியே 15 இலட்ச ரூபாய் பணமும் மற்றுமொரு வீட்டில் 25 பவுண் நகையும் திருட்டு

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் இரு வீடுகளில் ஒரு கோடியே 15 இலட்ச ரூபாய் பணம் மற்றும் 25 பவுண் நகைகள் என்பவை களவாடப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த திருடர்கள் , வீட்டில் இருந்த ஒரு கோடியே 15 இலட்ச ரூபாய் பணத்தினை திருடி சென்றுள்ளனர்.

வீட்டின் சமையலறை ஊடாக புகுந்த திருடர்களே வீட்டில் இருந்த பணத்தை களவாடி சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

குறித்த வீட்டு உரிமையாளர் சீட்டு பிடிக்கும் தொழில் செய்பவர் என்றும் , நேற்றைய தினம் சனிக்கிழமை சீட்டு கூற இருந்த நிலையில் , சீட்டு பணமான ஒரு கோடியே 15 இலட்ச ரூபாய் பணத்தை வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்த வேளையே குறித்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதேவேளை, உடுப்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த 25 பவுண் தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர்

வீட்டு உரிமையாளர் காலையில் எழுந்த போது , வீட்டின் முன் பக்க கதவுகள் திறந்து இருப்பதனை அவதானித்து , நகைகள் வைத்த இடத்திற்கு சென்று பார்த்த போது , நகைகள் களவாடப்பட்டு இருந்துள்ளது.

நகைகள் களவாடப்பட்டமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
5 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
6 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
6 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
7 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
8 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
9 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்
2
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 04 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
3
ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள புகழ்ப
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
4
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள நில
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
5
அமெரிக்காவின் போர்ட்டோ ரிகோ நாட்டில் இருந்து சிகாகோ நோக்கிச் சென்
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
6
சீனாவின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும், தங்களின் கடல்சார் இறையாண
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
7
IPL 2026 Retained Stars Who Struggled To Deliver Consistently ft
செய்திகள் · 3 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net