← முகப்பு செய்திகள்

மோசமான வானிலை காரணமாக, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் தியகலா பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால்

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 24 பார்வைகள்
மோசமான வானிலை காரணமாக, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் தியகலா பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால்
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு; ஒருவழிப்பாதையாக மாற்றம்

மோசமான வானிலை காரணமாக, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் தியகலா பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து ஒருவழிப்பாதையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது

டிட்வா புயலின்போது வட்டவளை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் கொட்டிக் கிடந்த மண் மேட்டினை வெட்டி அகற்றப்பட்ட நிலையில், குறித்த பகுதியில் நேற்று (10) மாலை பெய்த கடுமையான மழைக் காரணமாக அதே இடத்தில் மற்றொரு மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் தற்போது போக்குவரத்து ஒருவழிப்பாதையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சம்பவ இடத்திலிருந்து இடிபாடுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த நாட்களில் நுவரெலியா மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலையினால் இவ் மண்சரி ஏற்பட்டுள்ளதுடன் இப்பகுதியில் பல இடங்களில் மண்சரிவுக்கான அறிகுறியாக அபாயகரமான வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால், இவ்வீதியில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் விழிப்பாகவே இருக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், குறித்த வீதியில் பயணிக்கும்போது சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net