← முகப்பு தலையங்கம்

மேற்காசிய பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், 92,700 டன் LPG ஏற்றிய ‘நந்தாதேவி’ சரக்கு கப்பல் இந்தியாவை

🕐 16 Mar 2026 📂 தலையங்கம் 60 பார்வைகள்
மேற்காசிய பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், 92,700 டன் LPG ஏற்றிய ‘நந்தாதேவி’ சரக்கு கப்பல் இந்தியாவை

மேற்காசிய பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், 92,700 டன் LPG ஏற்றிய ‘நந்தாதேவி’ சரக்கு கப்பல் இந்தியாவை வந்தடைந்தது. ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்து குஜராத் கண்ட்லா துறைமுகத்தில் கப்பல் பாதுகாப்பாக தங்கியுள்ளது.

மேற்காசியாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலையில், திரவ நிலையிலான பெட்ரோலியம் கியாஸ் (LPG) ஏற்றிய ‘நந்தாதேவி’ என்ற இந்திய கொடியுடன் கூடிய சரக்கு கப்பல் இந்தியாவை பாதுகாப்பாக வந்தடைந்துள்ளது. இந்த கப்பலில் மொத்தம் 92,700 டன் எடை கொண்ட LPG சரக்கு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு முக்கியமான ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக இந்த கப்பல் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

மேற்காசிய பகுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக அந்த பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, உலக நாடுகளின் சரக்கு கப்பல்கள் செல்லும் முக்கிய பாதையான ஹார்மூஸ் ஜலசந்தி சில காலத்திற்கு மூடப்பட்டதாக கூறப்பட்டது. அந்த வழியாக செல்லும் கப்பல்களுக்கு தாக்குதல் ஏற்படும் அபாயமும் இருந்ததாக தகவல்கள் வெளியானது.

இந்த சூழ்நிலையில் இந்திய கொடியுடன் கூடிய ‘ஷிவாலிக்’ மற்றும் ‘நந்தாதேவி’ என்ற இரண்டு கப்பல்களுக்கு மட்டும் ஈரான் சிறப்பு அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. இந்தியாவுடன் உள்ள நட்புறவை கருத்தில் கொண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பின்னர் இரு கப்பல்களும் பாதுகாப்பாக இந்தியாவை நோக்கி பயணம் தொடங்கின. அவை முறையே முந்த்ரா மற்றும் கண்ட்லா துறைமுகங்களை வந்தடையும் என முன்பே தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த கணிப்புப்படி ‘நந்தாதேவி’ கப்பல் தற்போது குஜராத் மாநிலத்தில் உள்ள கண்ட்லா துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. உலகளவில் எரிபொருள் விலைகள் உயர்ந்து, விநியோகத்தில் சிக்கல்கள் உருவாகும் சூழ்நிலையில் LPG சரக்கு இந்தியாவை வந்தடைந்தது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் பெர்சிய வளைகுடா பகுதியில் இந்திய கொடியுடன் இயங்கும் 22 கப்பல்கள் உள்ளன என்றும், அவற்றில் பணியாற்றும் 611 இந்திய கப்பல் பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

மேலும் செய்திகள்
தலையங்கம்
காயமடைந்தவர்களில் மூன்று இலங்கை பிரஜைகளும் அடங்குவர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சீரான ந
04 Jun 2026
தலையங்கம்
'ஐஸ்' போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்
04 Jun 2026
தலையங்கம்
விபத்து இடம்பெற்ற வேளை பஸ்ஸில் சுமார் 20 பயணிகள் பயணித்திருந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
04 Jun 2026
தலையங்கம்
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் புதன் பகவான் நுழைந்துள்ளார். அடுத்த 10 நாட்களுக்கு (ஜூன் 11, 2026
04 Jun 2026
தலையங்கம்
காலியில் திருட்டு சந்தேக நபரான 16 வயது சிறுவனைக் கொடூரமாகத் தாக்கிய குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச்
04 Jun 2026
தலையங்கம்
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 41 ஓட்டங்களால் அபார வெற்றி
04 Jun 2026
முக்கிய செய்திகள்
1
காயமடைந்தவர்களில் மூன்று இலங்கை பிரஜைகளும் அடங்குவர். அவர்கள் தற்
2
'ஐஸ்' போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்
3
நாவலப்பிட்டி, மாபாகந்த பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர
தமிழ் · 04 Jun 2026
4
மின்வாரிய தலைமையகத்தில் அதிர்ச்சி; ரகசிய டெண்டர் ஆவணங்கள் அடங்கிய
5
3 நாட்களாக தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் விற்பனை ஆகி வந்
6
அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையம்
தமிழ் · 04 Jun 2026
7
விபத்து இடம்பெற்ற வேளை பஸ்ஸில் சுமார் 20 பயணிகள் பயணித்திருந்ததாக
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net