← முகப்பு செய்திகள்

மூதூர் தக்வா நகர் “பெந்திஸ் அடி” என அழைக்கப்படும் கடற்கரைப் பகுதியில், பச்சை நிற முற்சக்கர

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 26 பார்வைகள்
மூதூர் தக்வா நகர் “பெந்திஸ் அடி” என அழைக்கப்படும் கடற்கரைப் பகுதியில், பச்சை நிற முற்சக்கர
சாரதியை தாக்கிவிட்டு கடற்கரையில் கைவிடப்பட்ட ஆட்டோ இருவர் கைது

மூதூர் தக்வா நகர் “பெந்திஸ் அடி” என அழைக்கப்படும் கடற்கரைப் பகுதியில், பச்சை நிற முற்சக்கர வண்டியொன்று நல்லிரவு முதல் இனந்தெரியாத நபர்களால் கைவிடப்பட்ட நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதனை அவதானித்து சந்தேகமடைந்த மீனவர்கள், மூதூர் பொலிசாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, பொலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில், திருகோணமலையைச் சேர்ந்த ஓட்டுனருக்குச் சொந்தமான குறித்த முற்சக்கர வண்டி, இரவு வேளையில் சவாரிக்காக மூவரை ஏற்றிக்கொண்டு தம்பலகாமம் நோக்கிச் சென்றபோது, இடைநடுவில் மர்ம பயணிகளால் சாரதி தாக்கப்பட்டு வயல் பகுதியில் வீசப்பட்ட நிலையில், முற்சக்கர வண்டி கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த முற்சக்கர வண்டியில் சாரதியின் அனுமதிப்பத்திரம் மற்றும் சில பண நோட்டுகள் காணப்பட்டதாகவும், சந்தேகத்துக்கிடமான எந்தவொரு பொருளும் மீட்கப்படவில்லை என்றும் பொலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனுடன், முற்சக்கர வண்டியில் பயணித்த மர்ம நபர்களில் இருவர் தற்போது பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net