முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று (26) செவ்வாய்க்கிழமை விசாரணை அழைப்பாணையின் பேரில் புலமைச்சொத்து விசாரணைப்பிரிவில் முன்னிலையாகியிருந்தார்.
அமைச்சரின் சொத்து விபரங்கள் தொடர்பில் புலமைச்சொத்து விசாரணைப்பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளுக்கமைய இன்றையதினம் முன்னாள் அமைச்சர் அப்பிரிவில் முன்னிலையாகி, வாக்குமூலம் அளித்த பின்னர் விசாரணைப்பிரிவிலிருந்து வெளியேறியிருந்தார்.
நாட்டில் உள்ள பிரபல அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்குச் சொந்தமாக கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் சொகுசு சொத்துகள், காணிகளும் உள்ளதாகச் சட்டவிரோத சொத்துப் புலனாய்வு பிரிவுக்கு வழங்கப்பட்டிருந்த முறைப்பாட்டுக்கமைய அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதற்கமைய அரசியல்வாதிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனச் சுமார் 28 பேருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.