← முகப்பு செய்திகள்

‘மாநகரம்’ படத்தை இயக்கி பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ். அதை தொடர்ந்து ‘கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ’

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 24 பார்வைகள்
லோகேஷ் கனகராஜ் நடிக்கும் “டிசி” படத்தின் முன்னோட்டம் வெளியீடு

‘மாநகரம்’ படத்தை இயக்கி பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ். அதை தொடர்ந்து ‘கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்ற கான்செப்ட்டை தொடங்கி அதன் கீழ் தொடர்ந்து பல படங்களை இயக்கி வருகிறார். இதற்காகவே லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. சமீபத்தில் ரஜினியை வைத்து ‘கூலி’ படத்தை இயக்கினார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவில் வரவேற்பை பெறவில்லை. இதற்கிடையில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘டிசி’ என்ற படத்திலும் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்தில் ‘தேவதாஸ்’ என்கிற கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜும், சந்திராவாக வாமிகா கபியும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ‘டிசி’ படத்தின் முன்னோட்டம் பிரான்ஸில் நடைபெறும் 79 வது கேன்ஸ் திரைப்பட விழாவில் காட்சிப் படுத்தப்பட்டது. இதற்காக, இப்படத்தின் கதாநாயகன் லோகேஷ் மற்றும் இயக்குநர் அருண் ஆகியோர் பிரான்ஸ் சென்றுள்ளனர். தற்போது, இந்த படத்தின் முன்னோட்டம் சன் பிக்சர்ஸின் அதிகாரப்பூர்வ யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த, பழி வாங்கும் கதைக்களத்தை மையமாகக் கொண்டது என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில், இந்த படத்தின் முன்னோட்டம் முழுவதும் வன்முறை காட்சிகள் கொண்டதாக அமைந்துள்ளன. முன்னோட்டத்தில் இடம் பெற்றுள்ள ரத்தம் தெறிக்கும் காட்சிகளைப் பார்க்கும் போது, நிச்சயம் இப்படத்திற்கு ‘ஏ’சான்றுதான் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்
முக்கிய செய்திகள்
1
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 07 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
2
நடுவானில் 33,000 அடி உயரத்தில் விமான என்ஜின் வெடித்தும் பயணிகளை க
செய்திகள் · 27 நிமிடங்கள் முன்னர்
3
பிரிட்டனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கிய இளைஞரால் 18 வயது
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
4
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி விடுத்த நேருக்கு நேர் பேச்சு
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
5
அமெரிக்காவின் மறைந்த தொழிலதிபரும், சிறுமிகளை பாலியல் கடத்தல் செய்
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
6
India T20 Squad- List of 5 cricketers not selected from T20 World
செய்திகள் · 2 மணி நேரம் முன்னர்
7
Rajat Patidar Omission In India's T20 Squad Sparks Debate- H
செய்திகள் · 2 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net