← முகப்பு பதிவு

மன்னார் நகர சபைத் தவிசாளர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக வடக்கு மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானியின்

🕐 19 மணி நேரம் முன்னர் 📂 பதிவு 6 பார்வைகள்
மன்னார் நகர சபைத் தவிசாளர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக வடக்கு மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானியின்
மன்னார் தவிசாளருக்கு எதிரான விசாரணை தொடர்பான வர்த்தமானி – கால எல்லை முடிவடைந்ததால் வழக்கு முடிவுறுத்தப்பட்டது

மன்னார் நகர சபைத் தவிசாளர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக வடக்கு மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் கால எல்லை நிறைவடைவதால், வழக்கு உத்தியோகபூர்வமாக முடிவுறுத்தப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுநரின் விசாரணை குழு தன் மீது விசாரணைகளை மேற்கொள்வது தொடர்பில் வெளியான வர்த்தமானி தொடர்பில் மன்னார் நகர சபைத் தவிசாளரால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதன்போது, எதிர் மனுதாரர் சார்பில் முன்னிலையான அரச சட்டவாதி, குறித்த விசாரணையை முன்னெடுப்பதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஆங்கில மற்றும் சிங்கள மொழியாக்கங்களில் 'நகர சபை' என்பதற்குப் பதிலாக 'மாநகர சபை' எனத் தவறுதலாகக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், தமிழ் மொழியில் அது சரியான முறையில் வெளியிடப்பட்டுள்ளதை மன்றின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

மேலும், சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் குறித்த விசாரணையை முன்னெடுப்பதற்கு மூன்று மாத கால அவகாசமே காணப்படுகின்றது. அந்தச் சட்டபூர்வமான கால அவகாசம் நாளை 4ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.

எனவே, விசாரணைகளை முழுமையாக நடத்தி முடிப்பதற்குப் போதிய கால அவகாசம் இல்லாமையைக் கருத்திற்கொண்டு, குறித்த வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெறுவதற்குப் எதிர்மனுதாரர்கள் தரப்பில் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அரச சட்டவாதி மன்றுக்குத் தெரியப்படுத்தினார்.

அதற்கமைய, குறித்த வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்படுவதாக மன்றில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அரச சட்டவாதியின் இந்த அறிவித்தலையடுத்து, மனுதாரர் தரப்புச் சட்டத்தரணியின் இணக்கத்துடன் குறித்த வழக்கானது நீதிமன்றத்தால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
4 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
4 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
4 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
5 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
7 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
7 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net