← முகப்பு செய்திகள்

மட்டக்களப்பு குடும்பிமலை வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகள் இரண்டுடன் விவசாயிகள் இ

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 12 பார்வைகள்
மட்டக்களப்பு குடும்பிமலை வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகள் இரண்டுடன் விவசாயிகள் இ
மட்டக்களப்பு குடும்பிமலையில் 2 உள்ளூர் துப்பாக்கிகளுடன் இருவர் கைது

மட்டக்களப்பு குடும்பிமலை வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகள் இரண்டுடன் விவசாயிகள் இருவர் நேற்று திங்கட்கிழமை (25) குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ தினமான நேற்று அதிகாலையில் குடும்பிமலை வயல் பகுதியை சிஐடியினர் சுற்றிவளைத்து முற்றுகையிட்டு சோதனை நடத்தினர்.

இதன்போது அந்த பகுதியில் மறைத்து வைத்திருந்த சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் குடும்பிமலை வயல் வட்டானை தலைவர் (வயது 45) மற்றும் விவசாயி உட்பட இருவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் சி.ஐ.டியினர் தம்மிடம் ஒப்படைத்துள்ளதாகவும் இன்று செவ்வாய்க்கிழமை (26) நீதிமன்ற சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net