← முகப்பு பதிவு

பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த முயல்பவர்களை தடுத்து

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 பதிவு 128 பார்வைகள்
பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த முயல்பவர்களை தடுத்து
பொலிஸார் பௌத்த பீடங்களுக்கு பயமா ? சுமந்திரன் கேள்வி

பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த முயல்பவர்களை தடுத்து சட்ட மீறல்களை செய்ய முனைகின்றார்கள் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் உள்ள வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான "பவானி"வீதியை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

குறித்த வழக்கு விசாரணையின் போது வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகி இருந்தார்.

குறித்த வழக்கு விசாரணையின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விகாரை பகுதிக்குள் அமைத்துள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை மீட்டால் சமாதான சீர்குழைவு ஏற்படும் என பொலிஸார் மன்றில் தெரிவித்து இருக்கின்றனர்.

பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை மறித்து வேலி அடைத்து வைத்துள்ள நிலையில் அதனை சட்டத்தின் பிரகாரம் அகற்ற பிரதேச சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

சட்டத்தினை நடைமுறைப்படுத்துபவர்களை தடுக்க முற்படுபவர்கள் , இடையூறு ஏற்படுத்துபவர்களுக்கு எதிராகவே பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இங்கே வீதியை பிடித்து வைத்துள்ள விகாராதிபதி , சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் சமாதான சீர்குழைவு ஏற்படும் என முறைப்பாடு செய்துள்ளார். இங்கே சமாதான சீர்குழைவு யாரால் ஏற்படும் ? நான் தான் சமாதான சீர்குழைவை ஏற்படுத்துவேன் என்பது போல விகாராதிபதி முறைப்பாடு செய்துள்ளார்

சட்டத்தை நடைமுறைப்படுத்துவர்களை தடுத்து சட்ட மீறல்களை பொலிஸார் செய்ய முற்படுகின்றனர்.

இது சிங்கள பௌத்த மேலாதிக்க மனநிலை ஆகும். பொலிஸாரும் பௌத்தர்களாக இருப்பதனால் பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்ட மீறல்களை மேற்கொள்ள முயல்கின்றனர்.

சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களை தடுப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ,மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
4 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
5 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
5 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
6 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
7 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
8 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள நில
தலையங்கம் · 35 நிமிடங்கள் முன்னர்
2
சீனாவின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும், தங்களின் கடல்சார் இறையாண
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
3
IPL 2026 Retained Stars Who Struggled To Deliver Consistently ft
செய்திகள் · 2 மணி நேரம் முன்னர்
4
Gajakesari Yoga in June 2026 bring luck and prosperity to these 4
இன்றைய ராசிபலன் · 2 மணி நேரம் முன்னர்
5
Suryakumar Yadav is all set to Removed As India T20 Captain; New
செய்திகள் · 2 மணி நேரம் முன்னர்
6
இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வரும் 5 முக்கிய கடத்தல்காரர்க
தமிழ் · 3 மணி நேரம் முன்னர்
7
உலகெங்கிலும் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பல்வேறு அளவிலான க
தமிழ் · 3 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net