← முகப்பு செய்திகள்

“பேட்ரியாட்” திரைப்படம் உலகளவில் 4 நாளில் ரூ. 68 கோடி வசூல்

🕐 05 May 2026 📂 செய்திகள் 72 பார்வைகள்
“பேட்ரியாட்” திரைப்படம் உலகளவில் 4 நாளில் ரூ. 68 கோடி வசூல்

மலையாள திரையுலகின் ஜாம்பவான் நடிகர்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்துள்ள புதிய படம் ‘பேட்ரியாட்’ . மகேஷ் நாராயணன் இயக்கும் இப்படத்தில் பகத் பாசில், ரேவதி, நயன்தாரா, கிரேஸ் ஆண்டனி, தர்ஷனா ராஜேந்திரன், ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாளத் திரையுலகத்தின் முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் நாள் வசூலாக உலகம் முழுவதும் சுமார் 29 கோடி வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் வெளியானது. கேரளாவில் மட்டும் முதல் நாள் வசூலாக 8 கோடியே 50 லட்சம் வசூலித்துள்ளதாகத் தகவல். இதன் மூலம் மலையாளப் படங்களில் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த இரண்டாவது படமாக அமைந்துள்ளது. முதலிடத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘எம்புரான்’ படம் இருக்கிறது. படத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பை அடுத்து மோகன்லாலுடன் இணைந்து நிற்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, ‘அனைவருக்கும் நன்றி’ என மம்முட்டி பதிவிட்டிருந்தார். இந்நிலையில், ‘பேட்ரியாட்’ படம் 4 நாள்களில் உலகளவில் ரூ. 68 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்
செய்திகள்
KS Bharat has officially retired from international cricket at the age of
4 மணி நேரம் முன்னர்
செய்திகள்
சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்து முதல் ஆளாக காங்கிரஸ்
7 மணி நேரம் முன்னர்
செய்திகள்
ஜூன் 8-ம் நடக்கும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அறிவித்துள்ளதால், திமுக கூட்டணியில்
7 மணி நேரம் முன்னர்
செய்திகள்
வடகொரிய அதிபரின் மகளான இளவரசி ஜூஏ, அந்நாட்டு Gen-Z இளைஞர்கள் மத்தியில் ஸ்டைல் ஐகானாக மாறியுள்ளார்.
7 மணி நேரம் முன்னர்
செய்திகள்
IND vs AFG Test: Why Rishabh Pant Lost Test Vice-Captaincy? Assistant coach
8 மணி நேரம் முன்னர்
செய்திகள்
மின்வாரிய அலுவலகத்தில் Hard Disk-கள் திருட்டு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி உண்மையை கொண்டு வர
8 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
100 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 11 அன்று புதன் மற்றும் சுக்கிரன் ஒர
2
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 05 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
3
லிங்க்ட்இன் (LinkedIn), இன்டீட் (Indeed) மற்றும் அப்வொர்க் (Upwor
தலையங்கம் · 35 நிமிடங்கள் முன்னர்
4
உக்ரைன் மீதான போரைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாத
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
5
ஃபிராங்பர்ட் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பெரிய ஜெட்
பதிவு · 2 மணி நேரம் முன்னர்
6
Rare Planetary Transit On 11 June 2026 After 100 Years: ஜூன் 11
இன்றைய ராசிபலன் · 2 மணி நேரம் முன்னர்
7
உலக அரங்கில் எப்போதுமே கணிக்க முடியாத அதிரடி அரசியல் ஆட்டங்களை ஆட
தலையங்கம் · 4 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net