← முகப்பு செய்திகள்

பிளே ஆஃப் இடத்தை உறுதி செய்யுமா குஜராத் டைட்டன்ஸ்? – கேகேஆர் அணிக்கெதிராக முதலில் பந்துவீச்சு

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 16 பார்வைகள்
பிளே ஆஃப் இடத்தை உறுதி செய்யுமா குஜராத் டைட்டன்ஸ்? – கேகேஆர் அணிக்கெதிராக முதலில் பந்துவீச்சு

பட மூலாதாரம், ANI

ஐபிஎல் 2026 தொடரின் 60வது லீக் சுற்றுப் போட்டியில் இன்று (மே 16) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது குஜராத் டைட்டன்ஸ். இந்தப் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடக்கிறது.

குஜராத் டைட்டன்ஸ் அணி கடைசியாக விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. 12 போட்டிகளில் 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது டைட்டன்ஸ்.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியும். ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளைத் தவிரு மற்ற அணிகளால் 18 புள்ளிகள் பெற முடியாது என்பதால், டைட்டன்ஸ் அடுத்த சுற்றுக்குள் நுழைவதை இந்த வெற்றி உறுதிபடுத்தும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 11 போட்டிகளில் 9 புள்ளிகள் பெற்றிருக்கிறது. புள்ளிப் பட்டியலில் அந்த அணி 8வது இடத்தில் இருக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறாவிட்டால், அவர்களின் பிளே ஆஃப் வாய்ப்பு பெருமளவு பாதிக்கப்படும்.

இவ்விரு அணிகளும் இந்த சீசன் இதற்கு முன் மோதிய போட்டியில் (ஆமதாபாத்தில்) குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த அணியில் பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக தமிழ்நாடு ஸ்பின்னர் சாய் கிஷோர் பிளேயிங் லெவனில் இடம்பெற்றிருக்கிறார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேயிங் லெவனுக்கு வருண் சக்கரவர்த்தி திரும்பியிருக்கிறார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த போட்டியில் அவர் விளையாடாமல் இருந்தார்.

கேகேஆர் அணியின் பிளேயிங் லெவனில் 3 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கிறார்கள். சப்ஸ்டிட்யூட் வீரர்கள் பட்டியலில் ராவ்மன் பவல் மற்றும் மதீஷா பதிரானா இருவருமே இடம்பெற்றிருக்கிறார்கள். அதனால், ஒருவேளை பவல் பேட்டிங்குக்குத் தேவைப்படாதபட்சத்தில், அந்த அணி பந்துவீசும்போது பதிரானா இம்பேக்ட் வீரராகக் களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இந்த சீசனில் பதிரானா ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.

பிளேயிங் லெவனில் யார்?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இந்தப் போட்டிக்கான கேகேஆர் அணிக்கு வருண் சக்கரவர்த்தி மீண்டும் திரும்பினார். காயம் காரணமாக அவர் முந்தைய போட்டியில் விளையாடவில்லை. அவர் வைபவர் அரோராவுக்குப் பதில் இடம்பெற்றிருக்கிறார்.

பிளேயிங் லெவன்: ஃபின் ஆலன், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), அங்க்ரிஷ் ரகுவன்ஷி (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், ரிங்கு சிங், மனிஷ் பாண்டே, அனுகூல் ராய், சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி, சௌரப் துபே, கார்த்திக் ஷர்மா.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: ரமன்தீப் சிங், தேஜஸ்வி சிங், மதீஷா பதிரானா, ராவ்மன் பவல், வைபவ் அரோரா.

குஜராத் டைட்டன்ஸ்

இந்தப் போட்டிக்கான டைட்டன்ஸ் அணியில் 1 மாற்றமும் செய்யப்படது. பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக சாய் கிஷோர் இந்தப் போட்டியில் விளையாடுகிறார்.

பிளேயிங் லெவன்: ஷுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்ஷன், ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), நிஷாந்த் சிந்து, வாஷிங்டன் சுந்தர், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், அர்ஷத் கான், ககிஸோ ரபாடா, சாய் கிஷோர், மொஹம்மது சிராஜ்.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: ராகுல் திவேதியா, குமார் குஷாக்ரா, பிரசித் கிருஷ்ணா, அனுஜ் ராவத், கிளென் ஃபிலிப்ஸ்.

பிபிசிதமிழ்

மேலும் செய்திகள்
முக்கிய செய்திகள்
1
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 07 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
2
நடுவானில் 33,000 அடி உயரத்தில் விமான என்ஜின் வெடித்தும் பயணிகளை க
செய்திகள் · 28 நிமிடங்கள் முன்னர்
3
பிரிட்டனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கிய இளைஞரால் 18 வயது
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
4
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி விடுத்த நேருக்கு நேர் பேச்சு
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
5
அமெரிக்காவின் மறைந்த தொழிலதிபரும், சிறுமிகளை பாலியல் கடத்தல் செய்
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
6
India T20 Squad- List of 5 cricketers not selected from T20 World
செய்திகள் · 2 மணி நேரம் முன்னர்
7
Rajat Patidar Omission In India's T20 Squad Sparks Debate- H
செய்திகள் · 2 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net