பாரதிராஜா அவர்கள் நேற்றைய தினம் இயற்கை எய்திய உடனே, இதனைக் கேள்விப்பட்ட அனைத்துத் திரைப் பிரபலங்களும் பதறியடித்து ஓடி வந்தார்கள். இந்த நிலையில், பாரதிராஜாவை விட்டுப் பிரிந்து சென்ற அவரது மனைவி அங்கே வந்து அமர்ந்திருந்தார். அவர் முகத்தில் பெரிய அளவில் சோகம் எதுவும் தெரியவில்லை. ஆனாலும் அங்கே வரும் திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய அரசியல்வாதிகள் அவருக்கு ஆறுதல் கூறிச் சென்று கொண்டிருந்தார்கள்.
அங்கு வந்த கங்கை அமரன் மட்டும் தனது மன ஆதங்கத்தை அப்படியே வெளிப்படுத்திவிட்டார். “பாரதிராஜாவை வேண்டும் என்றுதானே அவரை விட்டுப் பிரிந்து சென்றாய்? இப்போது ஏன் இங்கே வந்தாய்?” என்று அவர் மிகவும் காட்டமாகவும், சத்தமாகவும் கேட்டது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தன்னைத் திரையுலகில் ஆளாக்கியவர் என்ற வகையில் நடிகை ராதிகா அவர்கள் காலையிலிருந்தே அங்கே நின்று அழுது கொண்டிருந்தார். ஆனால் பாரதிராஜாவின் மனைவி கண்களிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை.
பாரதிராஜாவின் மகன் மனோஜ் இறந்த பின்னர், பாரதிராஜா அவர்கள் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். அந்த இக்கட்டான நேரங்களிலாவது ஓடிப்போன மனைவி வந்து அவருக்கு ஆறுதல் சொல்லியிருக்கலாம்; ஆனால், அதற்குக்கூட அவர் துணையாக நிற்கவில்லை. இதையெல்லாம் மனதில் வைத்திருந்த கங்கை அமரன், அங்கு அப்படிப் பேசியதில் எந்தத் தவறும் இல்லை என்பது போன்ற ரியாக்ஷனைத்தான் பலர் கொடுத்திருந்தார்கள் என்பது, அங்கே நின்றவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.
முதலமைச்சர் விஜய் அவர்கள் வந்து பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய வேளையில், அங்கே பெரும் சோகத்தில் இருந்த ராதிகா எழுந்து நிற்கவில்லை. ஆனால், விஜய் அவர்கள் ராதிகாவின் தலையைக் கட்டி அணைத்து ஆறுதல் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார். இருப்பினும், ராதிகா அவர்கள் ஸ்டாலின் மற்றும் உதயநிதி வந்த வேளையில் எழுந்து நின்று உற்சாகமாக அவர்களை வரவேற்ற காட்சிகளைப் பார்க்க முடிந்தது. 14 வயதிலிருந்தே விஜய்யைத் தனக்குத் தெரியும் என்றும், “அக்கா அக்கா” என்றுதான் விஜய் தன்னை அழைப்பது வழக்கம் என்றும் ராதிகா கூறுவார். “இது நம்ம நீதி” படத்தில் விஜய் மற்றும் ராதிகா இணைந்து நடிக்கும்போது, விஜய்க்கு வெறும் 14 வயது என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.